பசும்பொன்னுக்கு செல்லாத இ.பிஎஸ்! அதிமுக வெளியிட்ட அறிவிப்பில் இதை கவனித்தீர்களா! - Seithipunal
Seithipunal


முத்துராமலிங்க தேவரின் 115-வது ஜெயந்தி விழா வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு அதிமுகவால் வழங்கப்பட்ட தங்க கவசம் குறித்தான பிரச்சனை நீதிமன்றம் வரை சென்றுள்ளது. இந்த நிலையில் அதிமுகவின் தலைமை கழகம் சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

அந்த அறிவிப்பில் "தேவர் திருமகனாரின் 115 ஆவது ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு 30-10-2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் சென்னை நந்தனம் அண்ணா சாலையில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் அவர்களின் உருவ சிலைக்கு கழக இடைக்கால பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் திரு எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் மாலை அணிவித்து மழை தூவி மரியாதை செலுத்த உள்ளார். இதனைத் தொடர்ந்து தலைமை கழக செயலாளர் முன்னாள் அமைச்சர்கள் பெருமக்களும் மழைத்துளி மரியாதை செலுத்த உள்ளனர். 

இந்த நிகழ்ச்சியில் அதிமுகவைச் சேர்ந்த அனைத்து தரப்பட்ட பிரதிநிதிகளும் நிர்வாகிகளும் கலந்து கொள்ள கொண்டு தேவர் திருமங்கனாருக்கு மரியாதை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளப்படுகிறார்கள்" என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பின் மூலம் எடப்பாடி பழனிச்சாமி பசும்பொனில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு செல்லவில்லை என்பது உறுதியாகி உள்ளது.

இதே போன்று மற்றொரு அறிவிப்பில் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் அதிமுக தலைமை கழக செயலாளர், முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் கொண்ட பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள முன்னாள் அமைச்சர்கள் மாவட்டச் செயலாளர்கள் அதிமுக கழக நிர்வாகிகள் முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்த இரண்டு அறிவிப்பிலும் இடைக்கால பொதுச் செயலாளர் பழனிச்சாமியின் கையொப்பம் இல்லாமல் அதிமுகவின் தலைமை கழகம் சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. அதிமுகவின் இபிஎஸ் தரப்பினர் வெளியிடும் அறிக்கை மற்றும் அறிவிப்பில் இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமியின் கையொப்பமிட்டு வெளியிடப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது கையொப்பம் இல்லாமல் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. இந்த நிலையில் தீபாவளிக்காக சொந்த ஊர் சென்ற பழனிச்சாமி மூன்று நாள் இடைவெளிக்குப் பிறகு இன்று முதல் கட்சி மற்றும் அரசியல் தொடர்பான பல்வேறு சம்பவங்கள் குறித்து அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Admk announced about Muthuramalingam jayanti


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->