தமிழக அரசு பங்கேற்காத தேநீர் விருந்து.. யார் யார் கலந்து கொண்டார்கள்.? - Seithipunal
Seithipunal


தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி அவர்கள் அளிக்கும் தேநீர் விருந்தில் தமிழக அரசு மற்றும் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளாத நிலையில் நேற்று நடைபெற்றது.

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி அளிக்கும் தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணித்த நிலையில் தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் யாரும் பங்கேற்கவில்லை. அதுமட்டுமின்றி விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்காது என அறிவித்தன.

இந்த நிலையில் இந்த தேநீர் விருந்தில் அதிமுக, தமாக, பாஜகவை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். அதிமுகவை சேர்ந்த விஜயபாஸ்கர், தங்கமணி, வேலுமணி, தளவாய்சுந்தரம் ஆகியோர்களும், தாமக தலைவர் ஜிகே வாசன், பாஜகவின் அண்ணாமலை, வானதி சீனிவாசன், குஷ்பு உள்ளிட்டோர் இந்த தேநீர் விருந்தில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK and BJP participate in governor meeting


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->