கரூர் கூட்ட நெரிசல் வழக்கு; 'அனைத்து ஆதாரங்களையும் சிபிஐ-யிடம் ஒப்படைத்துள்ளோம்:' ஆதவ் அர்ஜூனா..!
Adhav Arjuna stated that they have handed over all the evidence in the Karur crowd crush case to the CBI
கரூரில் நடந்த த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இதன் முதற்கட்ட விசாரணை கரூரில் நடைப்பெற்றது. இந்த வழக்கு விசாரணையில் த.வெ.க. பொதுச் செயலாளர் என். ஆனந்த், சி.டி. நிர்மல் குமார் மற்றும் த.வெ.க. நிர்வாகிகளிடமும் போலீஸ் அதிகாரிகளிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் நடந்த சம்பவம் குறித்து விசாரித்தனர்.
இதன் அடுத்தகட்ட விசாரணைக்காக த.வெ.க. நிர்வாகிகள் புதுடெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி, கடந்த 03 நாட்களாக விசாரணை நடைப்பெற்றது.

இதில், த.வெ.க. பொதுச் செயலாளர் என். ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, சி.டி. நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் கரூர் ஆட்சியர் தங்கவேலு, போலீஸ் போலீஸ் சூப்பிரண்டு ஜோஸ் தங்கையா மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
இந்நிலையில் இந்த சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜரானது குறித்து அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளதாவது:
எங்களிடம் இருந்த அனைத்து ஆதாரங்களையும் சிபிஐ-யிடம் ஒப்படைத்துள்ளோம் என்றும், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் விசாரணை சரியாக சென்று கொண்டிருக்கிறது என்றும் கூறியிட்டுள்ளார்.
அத்துடன், கரூர் சம்பவத்தில் உண்மை வெளியே வர வேண்டும் எனவும், எங்கள் குடும்பத்தில் 41 பேரை இழந்துள்ளோம். உண்மைக்காக உண்மைக்காக போராடி வருகிறோம் என்றும் கூறியதோடு, அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு அறிவில்லாத துறையை கொடுக்க வேண்டும் என்றும், சுகாதாரத்துறையை கொடுத்து அரசை அவமானப்படுத்த வேண்டாம் என்று கூறியுள்ளார்.
English Summary
Adhav Arjuna stated that they have handed over all the evidence in the Karur crowd crush case to the CBI