அனைவரையும் சிரிக்கவைத்த உடல் எடை.! வெடித்து உயிரிழந்த நகைச்சுவை நடிகர்.! - Seithipunal
Seithipunal


ஒரு திரைப்படத்தில், நடிகர் நடிகைகள் எந்த அளவிற்கு முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறார்கள். அதே அளவிற்கு அந்த படத்தின் நகைச்சுவை கலைஞர்களும் முக்கியமானவர்கள் தான் சிறிது நேரம் படத்தில் தோன்றினாலும் கூட அவர்களுடைய நடிப்பு மனதில் நீங்கா இடத்தைப் பிடிக்கும். 

அந்த வகையில், நகைச்சுவை கதாபாத்திரங்களாக மனதில் இடம் பெற்றவர்கள் தான் சகாதேவன், மகாதேவன் சகோதரர்கள் அவர்களுடைய உடல் தோற்றம் தான். இவர்களை நகைச்சுவைக் கலைஞர்களாக உருவாக்கியது. இயக்குனர் பாக்யராஜூடைய சுந்தரகாண்டம் திரைப்படத்தில் காமெடி நடிகராக அறிமுகமாகி பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருக்கின்றனர். 

இவர்களுடைய உடல் எடை காரணமாக எந்த அளவு புகழ் ஏற்பட்டதோ அதே அளவிற்கு அது வேதனையையும் அவர்களுக்கு கொடுத்தது. மரபியல் ரீதியாக இவர்களுடைய உடல் எடை அதிகரிப்பு நாளுக்கு நாள் மிகவும் அதிகரித்துக் கொண்டே சென்றது. முறையான சிகிச்சை இல்லாத காரணத்தால் பல்வேறு உபாதைகளுக்கு ஆளாகி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மகாதேவன் நோய்வாய்பட்டு உயிரிழந்து விட்டார். 

சகாதேவன் சர்க்கரை வியாதிக்கு சிகிச்சை பெற்றுவந்தார். காலில் புண் ஏற்பட்ட காரணத்தால் அவரது வலது காலை வெட்டி எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இருப்பினும், உடலில் பல இடங்களில் வெடிப்புகள் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி இரண்டு நாட்களில் அவர் துடிதுடித்து உயிரிழந்துவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor and sahadevan death


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->