அதிரடி! அரசு மருத்துவமனை அலுவலர்களுக்கு பணி நீடிப்பு என்பதை கிடையாது...ஏன்? - மா.சுப்பிரமணியன் கேள்வி - Seithipunal
Seithipunal


2025-ம் ஆண்டு அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரியின் மருத்துவ மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா, நேற்று டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவப் பல்கலைக்கழக வெள்ளிவிழா கூட்டரங்கில் நடந்தது.

இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு மருத்துவ மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் விருதுகளை வழங்கினார்.

மா.சுப்பிரமணியன்:

அதன் பின்னர், அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,"தமிழகத்தில் எந்த ஒரு அரசு மருத்துவமனைகளிலும் அலுவலர்களுக்கு பணி நீட்டிப்பு என்பது கிடையாது. கடந்த ஆட்சிக் காலத்தில் இருந்திருக்கலாம். கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனை 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.

அதில் டாக்டர்கள் அனுபவம் தேவை என்பதை கருத்தில் கொண்டு, தற்போதைய இயக்குனர் ஒரு வருடம் பணி நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறார். வேறு எந்த உயர் மருத்துவ அலுவலா்களுக்கும் பணி நீட்டிப்பு கிடையாது.

தி.மு.க. அரசின் லட்சியம் 60 வயது முடிவடைந்தால் அவர்களுக்கு பணிநீட்டிப்பு என்பதே கிடையாது"என்று தெரிவித்துள்ளார். இது தற்போது வரவேறக்கத்தக்க ஒன்றாகப் அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Action There is no extension of service for government hospital officials Why Ma Subramanian questions


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->