சென்னையில் பிரம்மாண்ட தலைமை அலுவலகம்... அண்ணாமலையின் அடுத்த பிளான் என்ன? ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பில் தீவிர பயிற்சி! - Seithipunal
Seithipunal


பாஜகவில் இருந்து விலகிய பின்னர் அண்ணாமலை தொடங்கிய ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் செயல்பாடுகள் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, சென்னை ஈசிஆர் சாலையில் அமைப்புக்காக பிரம்மாண்டமான தலைமை அலுவலகம் அமைக்கப்பட உள்ளதாகவும், ஜனவரி 1-ம் தேதி முதல் நிர்வாகிகளுக்கான பயிற்சி பாசறை வகுப்புகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை, அதன்பிறகு ‘வீ தி லீடர்ஸ்’ என்ற அமைப்பை தொடங்கினார். போதைப்பொருள் எதிர்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சமூக விவகாரங்களை முன்னிறுத்தி இந்த அமைப்பின் சார்பில் பேரணிகள், பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த அமைப்பில் தற்போது 20 லட்சத்துக்கும் அதிகமான உறுப்பினர்கள் இருப்பதாக அண்ணாமலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர் எண்ணிக்கை 50 லட்சத்தை எட்டும்போது, ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பை அரசியல் கட்சியாக மாற்றுவது குறித்து முடிவு செய்யப்படும் என அண்ணாமலை ஏற்கனவே கூறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கு முன்னதாகவே தமிழகம் முழுவதும் மாவட்ட அளவில் அமைப்பின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்பதில் அண்ணாமலை கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை சந்தித்து வருவதுடன், அமைப்பின் செயல்பாடுகளை விரிவுபடுத்தும் பணிகளும் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்புக்கான தலைமை அலுவலகத்தை சென்னையில் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஈசிஆர் சாலையில் அமைக்கப்பட உள்ள இந்த அலுவலகத்துக்கான இடத்தை அமைப்பின் பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் மற்றும் ஆஸ்பயர் சுவாமிநாதன் ஆகியோர் பார்வையிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேபோல், அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு முறையான பயிற்சி வழங்குவதற்கான திட்டத்தையும் அண்ணாமலை முன்னெடுத்து வருவதாக கூறப்படுகிறது. ஜனவரி 1-ம் தேதி முதல் மாவட்ட வாரியாக பயிற்சி பாசறை வகுப்புகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் அமைப்பின் கொள்கைகள், செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடனடியாக சட்டமன்றத் தேர்தல் எதுவும் இல்லாத நிலையில், அமைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கு அடுத்த ஓராண்டு காலத்தை பயன்படுத்த அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அதன் பின்னர் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பை அரசியல் கட்சியாக மாற்றுவது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, உள்ளாட்சித் தேர்தலிலும் அமைப்பின் வலிமையை சோதிக்கும் வகையில் முக்கிய நிர்வாகிகளை களமிறக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளாட்சித் தேர்தலில் கிடைக்கும் ஆதரவு மற்றும் முடிவுகளை வைத்து, தமிழகம் முழுவதும் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் உண்மையான கட்டமைப்பு வலிமையை மதிப்பிட முடியும் என அண்ணாமலை கருதுவதாக கூறப்படுகிறது.

மேலும், பல்வேறு மாவட்டங்களில் சுயேட்சையாக போட்டியிட விரும்பும் உள்ளூர் நிர்வாகிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களை தங்கள் அமைப்பின் பக்கம் கொண்டு வருவதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால், அரசியல் கட்சியாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பை மாவட்ட அளவில் வலுப்படுத்தி, நிர்வாகிகளுக்கு பயிற்சி அளித்து, தேர்தல் களத்திலும் அதன் செயல்பாடுகளை பரிசோதிக்க அண்ணாமலை தரப்பு திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A grand headquarters in Chennai What is Annamalai next plan Intensive training with the We the Leaders organization


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->