மழையில் நனைந்த 8,000 டன் நெல்! 'நானும் டெல்டாக்காரன் தான் என்று சொல்வதற்குப் பதிலாக செயலில் காட்டுங்கள்!' -நயினார் கடும் விமர்சனம் - Seithipunal
Seithipunal


பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கடும் அதிருப்தியுடன் தெரிவித்துள்ளார்.அதில்,"தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால், அறுவடை செய்யப்பட்ட குறுவை நெல் சாகுபடியில் சுமார் 8,000 மெட்ரிக் டன்னுக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகியுள்ளன என்பது மனதை உலுக்கும் செய்தி.

விவசாயிகள் மாதக்கணக்கில் உழைத்து வளர்த்த நெல்களை அறுவடை செய்யப்பட்டு 10 நாட்கள் கடந்தும் கொள்முதல் செய்யாமல் விட்டு, அவர்களின் வியர்வையையும் நம்பிக்கையையும் வீணடித்துள்ள திமுக அரசின் அணுகுமுறை ஆணவமும் அலட்சியமும் கண்டனத்திற்குரியது.

நாங்கள் தொடர்ந்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நெல் கொள்முதலை துரிதப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். ஆனால் அதனை புறக்கணித்த திமுக அரசு, நெல்மூட்டைகளை சேதப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அறுவடைக்கு தயாராக இருந்த 1,00,000 ஏக்கர் நெற்பயிர்களையும் தண்ணீரில் மூழ்கடித்துள்ளது.

இதன் விளைவாக, டெல்டா விவசாயிகள் இன்று உண்மையிலேயே கண்ணீரில் மூழ்கியுள்ளனர்.“நானும் டெல்டாக்காரன் தான்” என்று பெருமையாகச் சொல்வதற்குப் பதிலாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக போர்க்கால அடிப்படையில் நெல் கொள்முதல் நடவடிக்கையைத் தொடங்கி, ஏக்கருக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை @BJP4Tamilnadu சார்பில் வலியுறுத்துகிறேன்" என்று நயினார் நாகேந்திரன் பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

8000 tons paddy soaked rain Instead of saying Delta person show it action Nayinar harshly criticized


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->