பதவியை இழக்கப்போகும் 6 தமிழக எம்பிக்கள்.! விரைவில் தேர்தல்.!! - Seithipunal
Seithipunal


டெல்லி மேல்சபையில் மொத்தமாக (ராஜ்ய சபா) மொத்தம் 245 எம்.பி.க்கள் உள்ளனர். இதில் 12  ராஜ்ய சபா உறுப்பினர்கள் ஜனாதிபதியால் நியமனம் செய்யப்படுகிறார்கள். 

ஜனாதிபதியால் நியமனம் செய்யப்படும் இந்த 12 உறுப்பினர்களை தவிர்த்து மற்றவர்கள் ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள எம்.எல்.ஏ.க்களால் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஒரு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும்.

தற்போது மாநிலங்களவை எம்பிக்கள் 51 பேரின் பதவிக்காலம் வருகிற ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைகிறது. காலியிடங்களில் பெரும்பாலானவற்றை பாஜகவும், காங்கிரசும் கைப்பற்ற இருப்பதால், இரண்டு கட்சிகளுக்கும் மாநிலங்களவையில் பலம் கூடும். 

தற்போது பாஜகவுக்கு மாநிலங்களவையில் 82 எம்பிக்கள் உள்ளனர். பாஜகவுக்கு மேலும் 13 எம்பி கிடைக்க வாய்ப்புள்ளது. காங்கிரஸுக்கும் மாநிலங்களவையில் 46 எம்பிக்கள் இருக்கும் நிலையில், தற்போது 11 எம்பிக்களின் பதவி காலம் நிறைவடைகிறது. புதிய எம்பிகளின் நியமனத்தால், 10 எம்பிக்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

தமிழகத்தில் இருந்து விஜிலா சத்யானந்த், மேட்டுப்பாளையம் செல்வராஜ், முத்துகருப்பன், சசிகலா புஷ்பா, திருச்சி சிவா மற்றும் டி.கே.ரங்கராஜன் உள்ளிட்ட 6 மாநிலங்களவை எம்பிகளின் பதவிக்காலமும் வருகிற ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

51 rajya sabha mps post ends in april


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->