பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு.!! - Seithipunal
Seithipunal


பிரதமர் மோடி வருகையையொட்டி, சென்னையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் அழைப்பை ஏற்று கேலோ இந்தியா போட்டிகளை துவங்கி வைக்க நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. நரேந்திர மோடி வருகைக்காக சென்னையில் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். சென்னையில் உள்ள தங்கும் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்களில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகளில் வாகனங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. முக்கிய ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்களிலும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 layer police protection in Chennai for Narendra Modi visit


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->