தமிழகத்தில் 05 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து உத்தரவு..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 05 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக உள்துறைச் செயலர் மணிவாசன் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

''திருச்சி ஆயுதப்படை டிஐஜி எம்.விஜயலட்சுமி இப்போது சென்னை ஊர்க்காவல் படை டிஐஜியாகவும், சிவகங்கை எஸ்.பி. சிவபிரசாத் இப்போது தூத்துக்குடி எஸ்.பி.யாகவும், அங்கிருந்த எஸ்.பி. அபிஷேக் குப்தா இப்போது சிவகங்கை எஸ்.பி.யாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மத்திய மண்டல சிபிசிஐடி எஸ்.பி. சண்முகபிரியா இப்போது சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை மேற்கு சரக எஸ்.பி.யாகவும், ராமேசுவரம் கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் பி.ஆர்.மீரா இப்போது சென்னை தலைமையிட செயலாக்கம் மற்றும் கணினி மயமாக்கல் பிரிவுக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.'' என்று கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

5 IPS officers transferred in Tamil Nadu


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->