BREAKING: கரூர் விஜய் பிரசாரத்தில் அதிர்ச்சி: 30க்கும் மேற்பட்டோர் மயக்கம்; 10 பேர் உயிரிழந்துள்ளதாக அச்சம்..! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று கரூரில் பிரச்சாரம் செய்தார். இக்கூட்டத்தில் பல்லாயிர கணக்கான மக்கள் கூடியிருந்தனர். இந்த கடும் நெரிசலில் சிக்கிய பலர் மயக்கம் அடைந்துள்ளனர். இதில், பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர்களில் 04 பேர் உயிரிந்து விட்டதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாமக்கல்லில் பிரசாரத்தை முடித்துக் கொண்ட தவெக தலைவர் விஜய், கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் இரவு 07.20 மணியளவில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, விஜய்யின் பிரசார பகுதியில் மின்தடை ஏற்பட்டது என தகவல் பிரசார பகுதியில் மின்தடை ஏற்பட்டது என தகவல் வெளியானது. 

இதற்கிடையில், கரூர் வேலுசாமிபுரம் பகுதியில் விஜய் பேசும் போது, அங்கு இடம்பெறும் மணல் கொள்ளை, மணல் குவாரி, கனிமவள கொள்ளை உள்ளிட்ட உள்ளூர் விசயங்களில் அதிக கவனம் செலுத்தி பேசியதோடு, அடுத்த 06 மாதங்களில் ஆட்சியும், காட்சியும் மாறும் என்றும், அதிகாரம் கை மாறும் என்றும் பேசினார்.

எனினும், அங்கு திரண்ட கூட்ட நெரிசலால் பலர் மயங்கியுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. உடனடியாக சம்பவ இடத்திற்கு கரூர் போலீஸ் சூப்பிரெண்டு சென்றுள்ளார்.

கூட்ட நெரிசலில் சிக்கி சிறுவர்கள், பெண்கள் என 30- க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தவர்களை பிரசார பகுதியில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதனையும் மீறி அவர்கள், சிகிச்சைக்காக அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில் சிறுவர்கள் சிலரும் காணாமல் போயுள்ளனர் என கூறப்படுகிறது. முடிவில் பிரசாரத்தில் மாயமான 09 வயது பெண் குழந்தையை கண்டுபிடித்துத் தரக்கோரி தொண்டர்களிடம் விஜய் கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது. கரூரில் பலர் மயக்கமடைந்துள்ள நிலையில், 04 உயிரிழந்துள்ளதாக சித்துக்கள் வெளியாகியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

30people fainted and 10 feared dead at Karur Vijay campaign rally


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->