24 மணி நேரமும் மதுக்கடையா...? ரெஸ்ட்ரோ பார் விவகாரத்தில் தமிழக அரசின் முடிவு என்ன...? - அமைச்சர் விக்னேஷ் உடைத்த உண்மை - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உணவக வசதியுடன் கூடிய மதுபானக் கூடங்கள் (ரெஸ்ட்ரோ பார்) அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அண்மையில் பரவிய தகவல்கள் அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதுகுறித்து மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் விளக்கம் அளித்துள்ளார்.கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விக்னேஷ், டாஸ்மாக் நிர்வாகத்தில் மேற்கொள்ளப்பட உள்ள மாற்றங்கள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அவர் பேசியதாவது,"கடந்த ஆட்சிக் காலங்களில் டாஸ்மாக் நிர்வாகம் பல்வேறு குறைபாடுகளுடன் செயல்பட்டது. அதன் விளைவாக, பல கடைகளின் முன்பாக மது அருந்தியவர்கள் போதையில் சாலையோரங்களில் படுத்துக் கிடப்பது, காலி மதுபாட்டில்கள் மற்றும் கண்ணாடிக் கோப்பைகளை அங்கேயே வீசி விட்டு செல்வது போன்ற காட்சிகள் பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக இருந்து வருகின்றன.

இந்த நிலையை மாற்றி, ஒழுங்குமுறையுடனும் நாகரிகமான சூழலுடனும் செயல்படும் அமைப்பாக டாஸ்மாக் நிர்வாகத்தை மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது.அதற்காக எந்தெந்த மாற்றங்களை மேற்கொள்ளலாம் என்பது குறித்து பல்வேறு தரப்பினரின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் அரசு பரிசீலித்து வருகிறது.

அந்த ஆலோசனைகளில், உணவகத்துடன் இணைந்த மதுபானக் கூடங்கள் என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டது. சிலர் டாஸ்மாக் நிர்வாகத்தை தனியார் வசம் ஒப்படைக்கலாம் என்றும் கருத்து தெரிவித்தனர். மேலும் சிலர், அரசே நேரடியாக நிர்வாகத்தை நவீனப்படுத்தி, சேவையின் தரத்தையும் கட்டமைப்பையும் மேம்படுத்த வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினர்.

ஆனால், ஆலோசனையாக முன்வைக்கப்பட்ட பல்வேறு கருத்துகளில், 'ரெஸ்ட்ரோ பார்' தொடர்பான தகவல் மட்டும் வெளியே பரவி, அதையே அரசின் உறுதியான முடிவு போல சித்தரித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டன.உண்மையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு இதுவரை எந்தவித இறுதி முடிவையும் எடுக்கவில்லை.

எந்த திட்டமும் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் பெறவில்லை. மக்கள் விருப்பம், சமூக சூழல் மற்றும் பொது நலன் ஆகியவற்றை முழுமையாக கருத்தில் கொண்ட பிறகே அரசு எந்த முடிவையும் எடுக்கும்.டாஸ்மாக் துறையை வருவாய் ஈட்டும் கருவியாக மட்டுமே அரசு பார்க்கிறது என்ற கருத்திலும் எந்த உண்மையும் இல்லை.

அரசின் நோக்கம் வருமானத்தை அதிகரிப்பது அல்ல; மாறாக, நிர்வாகத்தை சீரமைத்து, ஒழுங்குபடுத்தி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நிலைகளை குறைப்பதே முக்கிய இலக்காகும்.எனவே, அரசு மதுபான விற்பனையை விரிவுபடுத்தவோ அல்லது வருமானத்தை உயர்த்தும் நோக்கில் புதிய திட்டங்களை செயல்படுத்தவோ முயற்சிக்கிறது என்று யாரும் கருத வேண்டிய அவசியமில்லை.

குறிப்பாக, இதுபோன்ற யூகங்களின் அடிப்படையில் எதிர்க்கட்சிகள் அரசை விமர்சிக்க முயன்றால் அது முற்றிலும் தவறான புரிதலாகவே இருக்கும்.இவ்வாறு அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

24 hour liquor shops What Tamil Nadu government decision restro bar issue truth revealed by Minister Vignesh


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->