234 தொகுதிகள் தயாராக, வேதாரண்யம் நோக்கி விஜயின் அரசியல் நடை...! - தேர்தல் களத்தில் த.வெ.க. அதிரடி திட்டம்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் தீவிர அரசியல் பணிகளில் இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, வரும் 27-ந்தேதி தேர்தல் அறிக்கையை வெளியிட திட்டமிட்டு, அதற்கான முன்னேற்பாடுகளை வேகமாக மேற்கொண்டு வருகிறது.

அதே நேரத்தில், 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர் தேர்வு பணியும் முழு வேகத்தில் நடைபெற்று வருகிறது.தற்போதைய தகவல்படி, ஒவ்வொரு தொகுதியிலும் தலா மூன்று பேரை முன்தேர்வாக குறித்துக் கொண்டு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதில் சுமார் 80 சதவீதம் பேர் மாவட்ட செயலாளர்கள் எனவும், மீதமுள்ளவர்கள் மாநில நிர்வாகிகள் மற்றும் முக்கியப் பொறுப்பாளர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், வில்லிவாக்கம் தொகுதியில் சமீபத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவரின் மகன் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொளத்தூர் தொகுதியில் பிரபல தொழிலதிபர் ஒருவரும் களமிறங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல், ஆலங்குளம் தொகுதியில் தியேட்டர் உரிமையாளரின் மகன், வாசுதேவநல்லூர் பகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர் ஆகியோரும் த.வெ.க. வேட்பாளர்களாக அறிவிக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், கட்சித் தலைவர் விஜய் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பது அரசியல் அரங்கில் பெரிய விவாதமாக மாறியுள்ளது. கிடைத்த தகவல்படி, வேதாரண்யம் தொகுதியில் அவர் போட்டியிட வாய்ப்பு அதிகம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தொகுதியில் தற்போது ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ.வாக உள்ளார். மேலும், திராவிட முன்னேற்றக் கழகம் கடந்த தேர்தலில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது.

மேலும்,மீனவர்கள் மற்றும் விவசாயிகள் அதிகம் வாழும் வேதாரண்யம் தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு அதிகம் என ஆய்வுகள் காட்டுவதால், விஜய் இத்தொகுதியில் களம் காண்பார் என்றே அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

234 seats ready Vijay political path towards Vedaranyam TVK action plan election field


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->