1350 டன் யூரியா மூட்டைகள் கூடல்புதூரில் சிக்கியது...! தி.மு.க.வின் இரட்டை வேடம் வெளிச்சம்...!-அண்ணாமலை
1350 tons urea bundles stuck Koodalpudur DMKs double role exposed
பா.ஜ.க. தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை 'தென்மாவட்ட விவசாயிகள் அவதி' குறித்து வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டதாவது,"தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு -விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளுக்கு விநியோகிக்க 1,350 டன் யூரியா உரம் குஜராத்திலிருந்து சிறப்பு சரக்கு ரெயிலில் கொண்டு வரப்பட்டு, மதுரை கூடல்புதூர் குட்ஷெட்டில் வந்தடைந்துள்ளது.

ஆனால், அங்கு தி.மு.க. வட்டச் செயலாளரான செந்தில் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தி, லோடுமேன்களை கட்டுப்பாட்டில் வைத்து, யூரியா மூட்டைகளை லாரிகளில் ஏற்றவிடாமல் தடுத்து நிறுத்தியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மாலை 6 மணிக்கு முன் ஏற்றினால் ரூ.100 கூலி, 6 மணிக்குப் பிறகு ஏற்றினால் ரூ.300 கூலி என்ற பெயரில் அதிக கமிஷன் பறிக்க, திட்டமிட்டு லோடிங்கை தாமதப்படுத்தியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால், சரியான நேரத்தில் உரம் கிடைக்காமல், லாரி உரிமையாளர்கள் தினமும் ரூ.2 லட்சம் வரை நஷ்டம் சந்தித்து வருகிறார்கள்.இதற்கிடையில், ஒருபுறம் முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு “உரத் தட்டுப்பாடு” என்று கடிதம் எழுதுகிறார்; இன்னொரு புறம் அவரின் கட்சியினரே மதுரையில் உரத்தை முடக்கி வைக்கிறார்கள்.
இந்த இரட்டை நடிப்பால் பாதிக்கப்படுவது விவசாயிகள்தான். தென்மாவட்ட விவசாயிகள் அவதி அடையாமல், உடனடியாக யூரியா மூட்டைகளை உரிய இடங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தன்னுடைய கட்சியினரின் அடக்குமுறை செயல்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விரைந்து கட்டுப்பாடு விதிக்க வேண்டும் எனவும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
English Summary
1350 tons urea bundles stuck Koodalpudur DMKs double role exposed