தமிழக பட்ஜெட் 2026-27; சிறுபான்மையினர் நலத் துறைக்கு 1,700 கோடி ரூபாய் ஒதுக்கீடு; ஹஜ் பயண அரசு மானியம் ரூ.35,000 ஆக உயர்வு..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் நடப்பு நிதி ஆண்​டுக்​கான (2026-27) பொது பட்​ஜெட்​டை, தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்​சர் மரிய வில்​சன் தாக்கல் செய்து உரை நிகழ்த்தினார். இதிலும் சிறுபான்மையினர் நலன்கள் தொடர்பான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, மதச்சார்பற்ற சமூக நீதி அரசாகவும், சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதில் ஒரு முன்னோடி மாநிலமாகவும் தமிழ்நாடு திகழும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சிறுபான்மையின மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகையினை தவெக அரசு தொடர்ந்து வழங்கும் என்றும், தமிழ்நாடு மாநில ஹஜ் கமிட்டி மூலம் முதல்முறையாக புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு வழங்கப்படும் 25,000 ரூபாய் மானியம் நமது அரசால் 35,000 ரூபாயாக உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

மேலும், கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்கள் 1.05 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் கூடுதலாகத் துவக்கப்படும் என்றும், மேலும், கபர்ஸ்தான்கள், கல்லறைத் தோட்டங்களின் உட்கட்டமைப்பினை மேம்படுத்துவதற்காக திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 34 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.

தவெக சிறுபான்மையினரைப் பாதுகாப்பதிலும், அவர்களின் நலன்களிலும் நமது முதல்வர் விஜய் தலைமையிலான அரசு ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது என்றும் சுட்டிகாதிட்டியுள்ளார். இந்த திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறைக்கு 1,700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மரிய வில்சன் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

1 700 crore rupees allocated for Minority Welfare Department in Tamil Nadu Budget 2026


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...


செய்திகள்



Seithipunal
--> -->