பிறந்த தேதி எண்.. கூட்டு எண்.. பெயர் எண்.. என்றால் என்ன? எவ்வாறு கணக்கிடுவது?
numerology
பிறந்த தேதி எண் :
ஒருவர் பிறந்த தேதியின் அடிப்படையில் மட்டும் கூறுவது பிறந்த எண் அல்லது பிறவி எண் அல்லது உடல் எண் என்று அழைக்கப்படுகின்றது.
பிறந்த தேதி எண் அடிப்படையில் ஒருவருடைய குணம், ஆசைகள் மற்றும் செயல்பாடுகளை மாற்றி கொள்ள இயலும்.
கூட்டு எண் :
ஒருவர் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகிய மூன்றையும் கூட்டி வருகின்ற எண்ணே கூட்டு எண் அல்லது உயிர் எண் என்று அழைக்கப்படுகின்றது.
கூட்டு எண் மூலம் எதிர்காலம், தொழில் மற்றும் வாழ்வியல் முறைகளை அறிந்து கொள்ள இயலும்.
பெயர் எண் :
ஒருவருடைய பெயரில் வருகின்ற அனைத்து எழுத்துக்களின் மதிப்பெண் அடிப்படையில் அமைவது பெயர் எண் ஆகும்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு எண்களில் எந்த எண் பலம்பெற்று உள்ளதோ? அந்த எண்ணிற்கு நட்பின் அடிப்படையில் நாம் பெயரை வைத்துக் கொள்வதன் மூலம் நம்மால் அதிர்ஷ்டத்தை உருவாக்க இயலும்.
மேலும், நாம் வைக்கக்கூடிய பெயரின் எண்ணிற்குரிய கிரகமானது ஜாதகத்தில் வலுப்பெற்ற நிலையில் இருக்கும்பொழுது, அவர் என்றென்றும் வெற்றியையும், அதிர்ஷ்டத்தையும் பெறக்கூடிய வெற்றி நாயகனாகவே திகழ்வார்.
உதாரணமாக,
ஒருவர் 12-11-1990-ல் பிறக்கின்றார் என வைத்துக்கொள்வோம்.
இதில் பிறந்த தேதி எண் என்பது,
1+2
3 (3 என்பது பிறந்த தேதி எண் ஆகும்)
இதில் கூட்டு எண் என்பது,
1+2+1+1+1+9+9+0
24 (2+4)
6 (இதில் 6 என்பது கூட்டு எண் ஆகும்)
இதில் பெயர் எண் என்பது யு.மு.முயுஆயுசுயுது,
1+2+2+1+4+1+2+1+1
15 இங்கு 15 என்பது பெயர் எண் ஆகும்.
ஒருவர் எண்கணித முறைப்படி அவரின் பெயரை மாற்றி அமைக்கும் பட்சத்தில், அவர்களின் வாழ்வில் ஏற்பட்ட துன்பங்கள் எல்லாம் மறைந்து அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும்.