மாதம் ரூ.500 சேமித்தாலே எதிர்காலம் பாதுகாப்பாகுமா? உண்மை இதுதான்!
Will saving 500 month really secure your future Here truth
“சேமிக்க பணமே இல்ல” என்பதே பலரின் நிரந்தர காரணம். ஆனால் நிதி நிபுணர்கள் சொல்வது ஒன்றே அதிக தொகை அல்ல, தொடர்ச்சியான பழக்கம் தான் எதிர்காலத்தை பாதுகாக்கிறது. மாதம் ₹500 போன்ற சிறிய தொகையிலேயே சேமிப்பை தொடங்கினால் கூட, சில ஆண்டுகளில் அது பெரிய ஆதாரமாக மாற முடியும் என்பதே உண்மை.

மாதம் ₹500 என்பதை தினசரி கணக்கில் பார்த்தால், ஒரு நாளைக்கு சுமார் ₹17 மட்டுமே. வெளியில் ஒரு தேநீர், snack, online offer செலவுகளை கொஞ்சம் கட்டுப்படுத்தினாலே இந்த தொகையை எளிதாக ஒதுக்க முடியும். இந்த பணத்தை வீட்டில் வைத்திருக்காமல், RD (Recurring Deposit), SIP (Mutual Fund) அல்லது Post Office Savings போன்ற பாதுகாப்பான வழிகளில் முதலீடு செய்தால், வட்டி அல்லது returns மூலமாக தொகை மெதுவாக பெருகத் தொடங்கும்.
உதாரணமாக, மாதம் ₹500-ஐ 5 ஆண்டுகள் தொடர்ந்து SIP-யில் முதலீடு செய்தால், முதலீட்டு தொகை ₹30,000 ஆகும். சராசரி returns சேரும்போது, இது அதைவிட அதிகமாக மாறும் வாய்ப்பு உள்ளது.
இதே பழக்கத்தை 10 ஆண்டுகள் தொடர்ந்தால், குழந்தைகளின் கல்வி, அவசர மருத்துவ செலவு அல்லது சிறிய கனவுகளுக்கான நிதியாக இது பயன்படும். சிறிய விதை தான், ஆனால் காலப்போக்கில் அது வலுவான மரமாக வளர்கிறது.
இந்த சேமிப்பு பழக்கத்தின் இன்னொரு பெரிய பலன் மன நிம்மதி. அவசர காலங்களில் “இப்ப என்ன செய்வது?” என்ற பயம் குறைகிறது.
கடன் மீது முழுமையாக சார்ந்திருக்க வேண்டிய நிலை தவிர்க்கப்படுகிறது. குறிப்பாக நடுத்தர குடும்பங்களுக்கு இந்த சிறிய சேமிப்பு பழக்கம் ஒரு பாதுகாப்பு கவசமாக செயல்படுகிறது.
நிதி நிபுணர்கள் கூறுவதாவது, சேமிப்பை தொடங்க சரியான நேரம் நாளை அல்ல இன்றே. தொகை சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை, தொடர்ச்சியே முக்கியம். இன்று மாதம் ₹500-ஆக தொடங்குங்கள். நாளை அதுவே உங்கள் எதிர்காலத்தை நம்பிக்கையானதாக மற்றும்.
English Summary
Will saving 500 month really secure your future Here truth