காற்றோட்டம் இல்லாத மூடிய அறையினுள் ஏன் தூங்கக்கூடாது?..! - Seithipunal
Seithipunal


வால் நட்சத்திரத்தின் 'வால்" எப்படித் தோன்றுகிறது?

வால் நட்சத்திரம் என்பது பனிக்கட்டியைப் போன்றது. இதில் தூசு, மண், பாறைகள், பல வகை வாயுக்கள் போன்றவையும் இருக்கும். சூரியனைச் சுற்றிவிட்டு, மீண்டும் சூரிய மண்டலத்துக்குள் நுழைந்து, சூரியனை நோக்கிச் செல்லும்போதுதான் வால் உருவாகும். சூரியனின் ஈர்ப்பு விசையால் வேகம் அதிகரிக்கிறது. சூரியனின் வெப்பமும், சூரியனில் இருந்து வெளிப்படும் ஆற்றல்மிக்க துகள்களும் வால் நட்சத்திரத்தைத் தாக்க ஆரம்பிக்கும்போது அவற்றிலுள்ள தூசுகளும், வாயுக்களும் வெளியேறுகின்றன. அப்போது இந்த வால் போன்ற பகுதி தோன்றுகிறது. சூரியனுக்கு அருகில் வரும்போது வால் தோன்றுகிறது.

பூமி சுழலும் திசையில் ராக்கெட் எதனால் ஏவப்படுகிறது என்று தெரியுமா?

பொதுவாக செயற்கைக்கோள்கள் பூமத்திய ரேகைப்பகுதியிலிருந்து ஏவப்படுகின்றன. ஏனெனில் பூமத்திய ரேகைப்பகுதியில் பூமியின் அச்சைப் பற்றிய சுழல்வு வேகம் மற்ற பகுதியை விட அதிகம். அதாவது பூமத்திய ரேகைப்பகுதியில் மணிக்கு 1600 கி.மீ. வேகத்தில் பூமி சுழல்வதால் பூமி சுழலும் திசையில் ராக்கெட் ஏவப்படுகிறது.

காற்றோட்டம் இல்லாத மூடிய அறையினுள் ஏன் தூங்கக்கூடாது?

காற்றோட்டம் இல்லாத மூடிய அறையினுள் எரியக்கூடிய பொருட்களின் காரணமாக உறங்குவது ஆபத்தானது. ஏனெனில் எரியக்கூடிய பொருளில் கார்பன் மோனாக்ஸைடு உருவாகிறது. இவை மரணத்தை நிகழ்விக்கக்கூடிய நச்சுப் பொருளாகும்.

வாகனங்களின் டயர்களில் அழுத்தப்பட்ட காற்றுக்குப் பதிலாக நைட்ரஜன் காற்று நிரப்பப்படுகிறது ஏன் என்று தெரியுமா?

நைட்ரஜனின் மூலக்கூறுகள் பெரிதானவை. இவை அழுத்தப்பட்ட காற்றை விட மெதுவாக நகரக்கூடியவை. எனவே இவை காற்றை போல டயர்களை விட்டு சீக்கிரமாக வெளியேறுவதில்லை. நைட்ரஜன் வாயு ஆனது நீண்ட காலத்திற்கு வாயு அழுத்தத்தை ஒரே நிலையில் வைத்திருக்கிறது. எனவே வாகனங்களின் டயர்களில் காற்றுக்குப் பதிலாக நைட்ரஜன் நிரப்பப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Why Do Not Slept In closed Room


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->