இரவு நேரங்களில் கீரை சாப்பிடக்கூடாது என்று ஏன் சொல்கிறார்கள்?! - Seithipunal
Seithipunal


இரவு நேரங்களில் கீரை சாப்பிடக்கூடாது என்று ஏன் சொல்கிறார்கள்?

கீரை எளிதில் ஜீரணமாகாது. அதிலும் இரவில் சாப்பிட்டுப் படுத்தால், தேவையற்ற உடல் தொந்தரவுக்கு வழி வகுத்துவிடும். எனவே, பகல் வேளைகளில் மட்டுமே அதைச் சாப்பிட வேண்டும்.

கோயில் கும்பாபிஷேகம் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்வதன் காரணம் என்ன?

அந்த காலத்தில் எந்த ஊருக்கும் இடி தாங்கிகள் என்று எதுவும் தனியாக கிடையாது. கோயில் கோபுரங்கள் தான் அந்த ஊரிலேயே உயரமாக இருக்கும். அதன் கலசங்களில் நிரப்பப்பட்டுள்ள நவதானியங்கள், இடியை உள்வாங்கி கொள்கின்றன. அதனால் ஊரில் அவ்வளவாக இடிகள் தாக்குவதில்லை. ஆனால் அந்த கலசத்தில் உள்ள நவதானியங்களின் சக்தியும் 12 ஆண்டுகள் வரை தான். அதனால் தான் கும்பாபிஷேகம் என்று வைத்து அந்த கலசங்களில் உள்ள நவதானியங்களை மீண்டும் புதிதாக நிரப்புகிறார்கள்.

ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும். உண்மையான விளக்கம் என்னனு தெரியுமா?

ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும். இது ஒரு பழமொழி என்பது நம்மில் பலருக்கும் தெரியும். ஆனால் இது ஒரு மருத்துவக் குறிப்பு.

ஆனையைப் பிரித்தால் ஆ + நெய். அதாவது 'ஆ" என்பதற்கு பசு என்று பொருள் உண்டு. அதாவது பசுவின் நெய் என்று பொருள் கொள்ள வேண்டும். பசு நெய்யை நாற்பது வயது வரை தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நாற்பது வயதுக்குமேல் பசுவின் நெய்யை படிப்படியாக குறைத்துக் கொள்ள வேண்டும். நெய்யை குறைக்காமல் சாப்பிட்டு வந்தால் கொழுப்பு சத்து உடலில் சேர்ந்து மாரடைப்பு வர வாய்ப்பு அதிகம் உள்ளது.

அதேபோல், பூனைக்கு என்பதை பூ + நெய் என்று பிரித்து பார்க்கும்போது, பூவில் இருந்து எடுக்கக்கூடிய தேனுக்கும் ஒரு காலம் வரும். அதாவது நாற்பது வயதுக்குமேல் நெய்யை சுருக்கி தேனை கூடுதலாக சாப்பிட வேண்டும் என்பதன் அர்த்தமாகும். தேன் எளிதில் ஜீரணமாகும். உணவு மற்றும் மருத்துவ குணம் நிறைந்ததாகும்.

வாழை மரத்தை வெட்டிவிடத் தண்டில் நீர் வடிவது ஏன்?

வாழையின் வேர்மூலம் உறிஞ்சப்பட்ட நீர் தண்டின் மூலம் மேல்நோக்கி கடத்தப்படும். தண்டு வெட்டிவிடப்படின் வேர் அழுத்தம் காரணமாக உறிஞ்சப்பட்ட நீர் மேலே தள்ளப்பட்டுக் கொண்டிருக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Why Do Not eat keerai at Night


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->