ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாத காய்கறிகள் – நிபுணர்கள் எச்சரிக்கை!
Vegetables that should not be kept in the fridge experts warn
வீடுகளில் காய்கறிகள், பழங்கள், உணவுப் பொருட்கள் கெட்டுப்போகாமல் இருக்க பெரும்பாலும் அனைவரும் ஃப்ரிட்ஜில் சேமிக்கிறார்கள். குறிப்பாக ஒரு வாரத்திற்குத் தேவையான காய்கறிகளை வாங்கி வைத்து வைக்கும் பழக்கமும் அதிகம். ஆனால், எல்லா காய்கறிகளையும் ஃப்ரிட்ஜில் வைப்பது ஆபத்து என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
அப்படியென்றால் எந்த காய்கறிகளை ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாது? பார்க்கலாம்.
வெள்ளரிக்காய்
பெரும்பாலான வீடுகளில் வெள்ளரிக்காய் ஃப்ரிட்ஜில் வைக்கப்படுவது வழக்கம். ஆனால் 10 டிகிரி செல்சியஸ்க்குக் குறைவான வெப்பநிலையில் வைத்தால் வெள்ளரிக்காய் விரைவில் கெட்டுப்போகும். எனவே அதை ஃப்ரிட்ஜில் வைக்கவே கூடாது.
தக்காளி
தக்காளியை ஃப்ரிட்ஜில் வைத்தால் சுவை குறைந்து விடும். எனவே அறை வெப்பநிலையிலேயே சேமிக்க வேண்டும். சிறந்தது, ஒரு கூடையில் வைத்து வைத்தால் பிரஷ்ஷாக நீண்ட நாட்கள் இருக்கும்.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கை ஃப்ரிட்ஜில் வைத்தால், கெட்டுப்போய் முளைக்க வாய்ப்புகள் அதிகம். எனவே அதை ஒருபோதும் ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாது.
வெங்காயம்
வெங்காயத்தையும் ஃப்ரிட்ஜில் வைத்தால் சீக்கிரம் கெட்டுப்போகும். அதனால் குளிர்ந்த, காற்றோட்டமான இடத்தில் வைத்துச் சேமிக்க வேண்டும்.
அதாவது, எல்லா காய்கறிகளையும் பிரிட்ஜில் வைத்துவிட்டால் பாதுகாப்பாக இருக்கும் என்ற தவறான எண்ணம் வேண்டாம். சில காய்கறிகளை அறை வெப்பநிலையிலேயே வைக்கும்போது தான் நீண்ட நாள் நல்ல நிலையில் இருக்கும்.
English Summary
Vegetables that should not be kept in the fridge experts warn