அடிக்கடி காபி குடிப்பவரா? இதை ஒரு தடவை படிங்க! - Seithipunal
Seithipunal


காபியில் இருக்கக்கூடிய 'காஃபைன்' நமது மூளையின் செயல்திறனை அதிகரித்து நாம் உற்சாகமாக வைத்திருக்க உதவுகிறது. காஃபியை தினசரி அளவுக்கதிகமாக குடிப்பதினால் அதிகமான தீமைகள் நம் உடலுக்கு ஏற்படுகின்றன. அவை என்னவென்று பார்ப்போம்:

அடிக்கடி காபியை பருகுவதன் மூலம் மனச்சோர்வு மற்றும் மனக்கவலை சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

மாலை வேளைகளில் அடிக்கடி காபி பருகுவதன் மூலம் நிம்மதியான உறக்கம் பாதிப்படைகிறது, ஜீரணக் கோளாறுகள் ஏற்படுகின்றன.

காபியில் இருக்கின்ற 'காஃபைன்' நம் உடலின் அமைதி நிலையை தொந்தரவு செய்து ஒருவிதமான அழுத்தத்தை கொடுக்கக் கூடியதாகும் .

அடிக்கடி காபி பருகுவதன் மூலம் சிகரெட் போன்ற பழக்கங்களுக்கு அடிமையாவதைப் போல் காபி இல்லாமல் நம்மால் எதுவும் செய்யமுடியாது என்ற எண்ணத்தை தோன்ற வைக்கிறது.

காபியானது நம் உடலில் இருக்கின்ற ஹார்மோன்களின் செயல்களை தாமதப்படுத்துகிறது. நம் உடலில் அதிகமான கெட்ட கொழுப்புகள் உருவாக ஒரு காரணமாக இருக்கின்றது. இதன் காரணமாக ரத்தநாளங்கள் ரத்தத்தை கடத்தும் அளவினை குறைக்கிறது. இதனால் இதய நோய் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Side effects of having more coffee 


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->