Freedom Fighters : ஆங்கிலேயர்களுக்கு எதிராக படை திரட்டி போர் புரிந்தவர்... யார் இவர்?! - Seithipunal
Seithipunal


செண்பகராமன் பிள்ளை:

தமிழகத்தை சேர்ந்த இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற போராளி ஆவார். இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக படை திரட்டி போர் புரிந்தவரை பற்றிய சிறிய தொகுப்பு...!!

பிறப்பு :

செண்பகராமன் 1891ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி திருவனந்தபுரத்தில் புத்தன் சந்தை என்ற ஊரில் சின்னசாமிப்பிள்ளை, நாகம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார்.

கல்வி : 

செண்பகராமன் இளம் வயதிலேயே விளையாட்டிலும், சிலம்பம், வாள்வீச்சு போன்ற கலைகளிலும் சிறந்து விளங்கினார். திருவனந்தபுரம் மன்னர் உயர்நிலைப் பள்ளியில் தம் பள்ளிப்படிப்பைத் தொடங்கினார். பெர்லின் பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்றார்.

திருமண வாழ்க்கை :

செண்பகராமன் லட்சுமிபாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

விடுதலை போராட்டத்தில் செண்பகராமனின் பங்கு :

சிறிய வயதிலேயே தம்முடன் பயின்ற மாணவர்களை சேர்த்து கொண்டு 'ஸ்ரீபாரத மாதா வாலிபர் சங்கம்" ஏற்படுத்தி 'வந்தே மாதரம்" என உரிமை முழக்கம் இட்டார். அதன் பின்னர் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு 'ஜெய் ஹிந்த்" என்ற முழக்கத்தை எழுப்பினார்.

'ஜெய் ஹிந்த்" என்னும் முழக்கத்தை முதலில் முழங்கியவர் செண்பகராமன் பிள்ளையே ஆவார். 1933ஆம் ஆண்டு வியன்னாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றிலும் இவர் முழங்கினார். இதைக் கேட்ட நேதாஜி இம்முழக்கத்தை வழிமொழிந்து உலகெங்கும் பரப்பினார்.

பெர்லினில் இந்திய சர்வதேசக் குழுவை நிறுவினார். ஐரோப்பிய நாடுகளில் இந்தியாவைக் குறித்து ஆங்கிலேயர் செய்து வந்த பொய் பிரசாரத்தை இக்குழுவின் உதவியுடன் முறியடித்தார். 

'புரோ இந்தியா" என்ற இதழை தொடங்கினார். சீனா, தென்னாப்பிரிக்கா, மியான்மர் முதலான நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து உலக மக்களிடையே விழிப்புணர்வினை ஊட்டி இந்தியாவிற்கு ஆதரவை திரட்டினார்.

முதல் உலகப்போர் நடந்த போது ஜிரிஸ்டின் சர்வ தேசிய இந்தியக் கமிட்டியை 1914ஆம் ஆண்டு செண்பகராமன் உண்டாக்கினார். ஜெர்மனியிடம் பிடிபட்ட ஆயிரக்கணக்கான இந்திய யுத்தக் கைதிகளை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளித்தார்.

ராணுவ சீருடையுடன் ராணுவ பயிற்சி அளிக்கப்பட்டு, தன்னார்வலர் படைப் பிரிவை செண்பகராமன் பிள்ளை, 'இந்திய தேசிய தன்னார்வப் படை என்ற பெயரில் நிறுவினார்.

செண்பகராமனின் மறைவு :

'நாட்டை திறமையாக ஆளும் தகுதி இந்தியருக்கு இருக்கிறதா என்பது சந்தேகமே" என்று இந்தியரை கூறினார் ஹிட்லர். ஹிட்லர் கூறியதைக் கேட்ட செண்பகராமன் கோபமடைந்து ஹிட்லருக்கு எதிராக திறமையாக வாதாடி, எழுத்து மூலம் ஹிட்லரை மன்னிப்பு கேட்க செய்தார்.

தங்கள் தலைவரை வாதாடி வென்ற செண்பகராமனை, அவர் கலந்து கொண்ட அரசாங்க விருந்து ஒன்றில் பரிமாறப்பட்ட உணவில் திட்டமிட்டபடி நஞ்சைக் கலந்தனர் ஹிட்லரின் தொண்டர்கள். இதனால் 1934ஆம் ஆண்டு மே 26ஆம் தேதி செண்பகராமன் மறைந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Senbagaraman pillai History


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->