சிவப்பு கவுனி அரிசி vs கருப்பு கவுனி அரிசி - எது பெஸ்ட்?
red kavuni rice and black kavuni benefits
சிவப்பு கவுனி அரிசி பட்டை தீட்டப்படாதது. இந்த அரிசியை தோலுடன் சாப்பிடும் போது நமக்கு மெக்னீஷியம், மேங்னீஸ், செலினியம் மற்றும் துத்தநாகம் உள்ளிட்ட சத்துகள் கூடுதலாக கிடைக்கும்.
இந்த அரிசியை சாப்பிடுவது சிறுநீரகம், இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. சிவப்பு அரிசியில் வைட்டமின் E அதிகம் இருக்கிறது. மேலும், இதிலுள்ள மாவுச்சத்து, ரத்த சர்க்கரையின் அளவை உயர்த்தாமல் பார்த்துக் கொள்ளும். இதிலிருக்கும் மினரல்கள் முடி, பற்கள், சருமம், எலும்பு, தசை மற்றும் நரம்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
அதேபோல், டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு சிவப்பு அரிசி மிகவும் ஏற்றதாக உள்ளது. சிவப்பு அரிசியில் தோசை செய்து சாப்பிடும்போது, அதை சுவை மேலும் கூடும். அதாவது, இரண்டரை கப் சிவப்பு அரிசிக்கு, அரை கப் உளுந்து என்ற விகிதத்தில் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த மாவை வழக்கம்போல் புளிக்க வைத்து தோசை செய்து சாப்பிடலாம். சாதாரண வெள்ளை அரிசியில் தோசை சுட்டு சாப்பிடுவதை விட, சிவப்பு அரிசியில் தோசை சாப்பிட்டால், ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பது கட்டுப்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
English Summary
red kavuni rice and black kavuni benefits