முலாம்பழத்தின் மருத்துவக் குணங்கள்..! கோடையில் சாப்பிட வேண்டிய பழம்..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பல இடங்களில் வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. வெயில் காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில், பலரது உடலும் மிகவும் வெப்பமாக இருக்கும். காலநிலை திடீரென்று மாறும்போது, பலர் கோடைக்காலத்தின் ஆரம்பத்தில் உடல்நலக்குறைவால் அவஸ்தைப்படுவார்கள்.

வெயில் காலங்களில் அடிக்கடி உடலுக்கு ஓய்வு கொடுப்பது அவசியம். அதிகமாக காய்கறிகளையும், பழங்களையும், பானங்களையும் உணவாக உட்கொள்ள வேண்டும்.

கோடையில் தவறாமல் சாப்பிட வேண்டிய பழங்களில் ஒன்று முலாம்பழம். இதில் நீர்ச்சத்து அதிகமாக நிறைந்துள்ளது. மேலும் இந்த பழத்தில் வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் ஜிங்க் அதிகம் உள்ளது.

முலாம்பழம் கோடை காலத்தில் மிக எளிதாக கிடைக்கக்கூடியது. இது அதிகப்படியான சத்துக்கள் அடங்கியுள்ள ஒரு நீர்ப்பழம். பல உடல் உபாதைகளுக்கும் அருமருந்தாக இருக்கிறது.

முலாம்பழத்தில் 95மூ நீர்ச்சத்துக்கள், வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் போன்ற ஆரோக்கியமான சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது. இந்த பழத்தில் உள்ள சத்துக்கள் அனைத்தும் நமது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, உடலுக்கு தேவையான குளிர்ச்சியைத் தருவதில் சிறந்த பழமாக உள்ளது.

மருத்துவக் குணங்கள் :

இது உடலிலுள்ள வெப்பத்தை உடனடியாகப் போக்கும் தன்மை உடையதால் அதிக உஷ்ணம் உள்ளவர்கள் எப்போதும் உட்கொள்ளலாம்.

இந்தப் பழம் கிட்னியில் உள்ள கல்லை கரைக்கக்கூடியது. மேலும் முதுமைக்காலத்தில் ஏற்படும் எலும்பு தேய்மானத்தையும் தடுக்கிறது.

இப்பழம் உடல் சோம்பலை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கிறது. உடல் எடையை குறைக்க உதவுகிறது.

முலாம்பழத்தில் உள்ள அடினோசைன் இரத்த செல்கள் கட்டியாவதை தடுக்கின்றது. இதனால் மாரடைப்பும், இதய நோய்களும் வராமல் தடுக்கப்படுகிறது.

முலாம்பழத்தில் சிறுநீர் பிரிப்புத் தன்மை உள்ளதால் சிறுநீரக நோயையும், சிரங்கு போன்ற நோய்களையும் குணப்படுத்த உதவுகிறது.

முலாம்பழத்தில் கரோட்டினாய்டு அதிகமாக உள்ளதால் புற்றுநோயைத் தடுக்கவும், நுரையீரல் புற்றுநோய் தாக்கும் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

சரியான உணவுப்பழக்கமின்மை, அதிகம் மருந்துகளை எடுத்துக்கொள்ளுதல் ஆகியவற்றால் பலருக்கும் வயிற்றுப்புண் எனப்படும் அல்சர் பிரச்சனை இருக்கும். இவர்கள் இந்தப் பழத்தை தொடர்ந்து சில நாட்கள் சாப்பிட்டுவந்தால், வயிற்றுப் புண் பூரண குணமடையும்.

இந்தப் பழத்தினை உண்டால் உடல் உள்ளுறுப்புகள் பாதுகாப்பாக இருப்பதோடு அழகும் மேம்படும்.

முலாம்பழ ஜூஸில் பொட்டாசியம் உள்ளது. இது இதயத் துடிப்பை இயல்பாக்கி, மூளைக்குத் தேவையான ஆக்ஸிஜனை அனுப்பி, மூளைச்சோர்வைக் குறைக்கும்.

நீரிழிவு நோயாளிகள் குறைந்த சர்க்கரை, குறைந்த கலோரி உணவு உண்பதால், எப்பொழுதும் சோர்வை உணர்வார்கள். அவர்களுக்கு முலாம்பழ ஜூஸ் மிகவும் சிறந்தது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

muskmelon fruit


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->