உங்க காதல் இரகசியத்தை சொல்லும் லவ் நம்பர் பற்றி தெரியுமா..? ஆச்சர்யம் தரும் ரகசியம்.!  - Seithipunal
Seithipunal


உங்களின் பிறந்த வருடம், மாதம் மற்றும் தேதி ஆகியவற்றின் கூட்டுத்தொகையே காதல் எண். உதாரணமாக 04-02-1989. இதில் 04+02+1989=33= 6. இது தான் காதல் எண்.

காதல் எண் 1: பெண்ணுக்குரிய குணம்:வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்று அதிக ஆர்வமுள்ளவர்கள். தனக்கு வரும் கணவன் தன்னைவிட எல்லா அம்சங்களிலும் உயர்ந்து நிற்க வேண்டும் என்று ஆசைப்படும் குணம் கொண்டவர்கள். உங்களுக்கு லட்சியமும், நகைச்சுவை குணமும் அதிகளவில் இருக்கும்

காதல் எண் 1: ஆணுக்குரிய குணம்:மனையிடத்தில் விசுவாசத்தோடும், பெருந்தனையோடும், நன்றியுணர்ச்சியோடும் இருப்பீர்கள்.மனைவியிடத்தில் விசுவாசத்தோடும், பெருந்தன்மையோடும், நன்றியுணர்ச்சியோடும் இருப்பீர்கள். மனைவியின் செயல்களில் குறைக் கண்டுபிடிப்பதைத் தவிர்த்து விடுங்கள். அதுவே, உங்கள் வாழ்க்கையை சொர்க்கம் போல் மாற்றிவிடும்.

காதல் எண் 2: பெண்ணுக்குரிய குணம்:கணவர் எள் என்றால் எண்ணையாய் நிற்கும் குணம் கொண்டவர். அடிக்கடி கோபம் அடையக்கூடியவர். நீங்கள் செய்யும் ஒவ்வொரு வேலையையும் அல்லது நீங்கள் உடுத்தும் உடையையும், அலங்காரத்தையும் உங்கள் கணவர் அல்லது காதலர் பாராட்ட வேண்டும் என்று நினைப்பவர்.

காதல் எண் 3: ஆணுக்குரிய குணம்:நீங்கள் ஒரு காதல் மன்னன். எப்பொழுதும் உங்கள் காதலியின் அனுதாபத்தை கேட்டு அதற்கு தீர்வு காண தவறமாட்டீர்கள்.
 
காதல் எண் 3: பெண்ணுக்குரிய குணம்:உங்களுக்கு அழகு கூட 2ம் பட்சம் தான். ஆனால், ஆண்மை நிறைந்தவரையே அதிகம் எதிர்பார்ப்பீர்கள். உங்களுக்கு எதிலும் பயம் என்பது கிடையவே கிடையாது.

காதல் எண் 3: ஆணுக்குரிய குணம்:தர்ம வல்லல் என்று போற்றப்படும் நீங்கள் அனைவருக்கும் உங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் வழங்குவர். எல்லாவற்றையும் ஜாலியாக எடுத்துக்கொள்ளும் குணம் கொண்டவர்.

காதல் எண் 4: பெண்ணுக்குரிய குணம்:உங்களை நேசிப்பவரிடம் எப்போதும் விசுவாசமாகவும், நன்றியுள்ளவராகவும் இருப்பீர்கள். நீங்கள் இருக்குமிடத்தில் எப்போதும் கும்மாளமும் வேடிக்கையும் சிரிப்பும் தான் இருக்கும்.

காதல் எண் 4: ஆணுக்குரிய குணம்:எப்போதும் குழந்தைகளையும், மனைவியையும் அதிகமாக நேசிப்பவர். உங்களை நேசிப்பவருக்கு உயிரைக்கூட தியாகம் செய்யத் தயங்காதவர். உங்களை கணவராக அடைபவர் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

காதல் எண் 5: பெண்ணுக்குரிய குணம்:எப்போதும் பேராசை குணம் கொண்டவர். இந்த உலகத்தை ஒரு முறையாவது சுற்றி வர வேண்டும் என்று ஆசை கொண்டவர். பெண்மை பரி பூரணமாக குட்கொண்டிருக்கும்.
 
காதல் எண் 5: ஆணுக்குரிய குணம்:உங்களது பார்வைக்காக ஏங்காத பெண்களே இருக்க முடியாது. உங்களின் போக்கு மற்றவர்களுக்கு அதிர்ச்சியையும், ஆனந்தத்தையும் அளிக்கலாம். உங்களுக்கு காதல் வாழ்க்கை ஒரு சவால் தான்!

காதல் எண் 6: பெண்ணுக்குரிய குணம்:என் கணவர், என் குழந்தைகள் தான் உலகம் என்று வாழக்கூடியவர். குப்பை மேட்டைக்கூட கோவிலாக்கும் கலை நயம் படைத்தவர்.

காதல் எண் 6: ஆணுக்குரிய குணம்:அழகை ஆராதனை செய்யும் சமயத்தில் கவிதைகளையும் எழுதித் தள்ளுவீர்கள். காதல் பவித்திரமானது என எண்ணும் குணம் கொண்டவர். பெண்ணை மலரெனக் கையாளும் பாங்குடையவர்.

காதல் எண் 7: பெண்ணுக்குரிய குணம்:உங்களை பார்க்கும் போது நீங்கள் அகம்பாவம் பிடித்தவர் போல் இருப்பீர்கள். ஆனால், பழகப் பழகத்தான் நீங்கள் இனியவர் என்று உணர்வார்கள். இஷ்டப்பட்டதை அடையத் தவறமாட்டீர்கள். அதிகாரமும், பணமும் உள்ளவரைத் தான் நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள்.

காதல் எண் 7: ஆணுக்குரிய குணம்:எப்போது பார்த்தாலும் புத்தகத்தோடு தான் இருப்பீர்கள். அதோடு காரணகாரியத்தில் ஆராய்ச்சியில் மூழ்கி விடுவீர்கள். கற்பனையிலேயே இருந்து கொண்டிருப்பீர்கள்.

காதல் எண் 8: பெண்ணுக்குரிய குணம்:நீங்கள் ஒரு அபூர்வப் பிறவி. எல்லாவற்றையும் ஏனோ தானோ என்று தான் செய்வீர்கள். பணம், பதவி எல்லாம் உங்களுக்கு அனாவசியம் தான்.

காதல் எண் 8: ஆணுக்குரிய குணம்உங்களுக்கு இடையூறாக இருப்பது உங்களின் பொறாமைக் குணம் தான். சமூக ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் உயர்ந்து நிற்கும் குணம் கொண்டவர். அடுக்கடுக்காக வெற்றிகளையும், தோல்விகளையும் சந்தித்தாலும், மனம் தளராமல் லட்சியவாதியாகச் செயல்பட்டு வெற்றியின் சிகரத்தை எட்டிப்பிடிப்பீர்கள்.

காதல் எண் 9: பெண்ணுக்குரிய குணம்:உங்களின் அன்பும், காதலும் காரணமாக உங்களோடு சேர்ந்து வாழும் வாழ்க்கை தான் உங்களது கணவருக்கு சொர்க்க வாழ்கை என்று கூறுவார்.

காதல் எண் 9: ஆணுக்குரிய குணம்:எந்த வேலையாக இருந்தாலும் சுறுசுறுப்பாக எளிதில் செய்து முடித்துவிடுவீர்கள். அரசியலில் நுழைந்தால் மக்களின் ஆதரவு எப்போதும் உங்களுத்தான்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

love number based on date of birth


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->