வரும் 10ஆம் தேதி முதல் பொதுமுடக்கம்.. இனி வீட்டில் என்ன செய்வது?! இதோ டிப்ஸ்.!  - Seithipunal
Seithipunal


வீட்டில் என்ன செய்வது? என்று தெரியாமல் நம்மில் பல பேர் தவித்து வருகிறோம். அதிலும் குறிப்பாக ஆண்களின் நிலைமை இன்னும் சற்று கடினமாகவே இருக்கின்றன. ஒவ்வொரு நாட்களையும் எப்படி கடப்பது? என்று இருப்பவர்களுக்கான சில டிப்ஸ்கள் இதோ..!!

இசை : 

எனக்கு நேரம் போகவில்லை என்று வருத்தப்பட்டு கொண்டிருப்பவர்கள் உங்கள் மனதிற்கு பிடித்த பாடல்களை ஒரு அமைதியான இடத்தில் ஹெட்செட் அணிந்து கொண்டு அந்த பாடல்களை கேளுங்கள். அந்த பாடல்கள் உங்களுக்குள் மகிழ்ச்சியை ஏற்படுத்தி தருவதோடு மட்டுமல்லாமல் உங்களின் நேரத்தையும் சீக்கிரம் கடக்க வைக்கும்.

சமையல் :

உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஒரு நாள் முழுக்க உங்கள் கைகளால் சமைத்து கொடுங்கள். அதன்மூலம் புதியதாக ஒன்றை நீங்கள் கற்றும் கொள்வீர்கள். மேலும், அவை உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பல மடங்கு உற்சாகத்தையும் ஏற்படுத்தி தரும்.

புத்தகம் : 

எனக்கு புத்தகம் எல்லாம் படிக்க நேரம் எங்கு உள்ளது? என்று கேட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு, இதோ உங்களுக்கு பல மணி நேரம் கிடைத்து இருக்கிறது. புத்தகம் படிப்பது என்பது ஒரு நல்ல பழக்கம். புத்தகத்தின் மூலம் பல புதிய தகவல்களையும், உங்கள் வாழ்க்கையில் பல அனுபவங்களையும் கற்று கொள்ள முடியும். புத்தகம் படிப்பதை பழக்கமாக மாற்றி கொண்டுவிட்டீர்கள் என்றால் போதும், பின்னாளில் அவை உங்களுக்கு வெற்றியை மட்டுமே தேடி தரும்.

உங்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு புத்தகத்தை முழுமையாக படித்து பாருங்கள். அவை நிச்சயம் உங்களுக்கு ஒரு புதுவிதமான புத்துணர்ச்சியை பெற்று தரும்.

புகைப்படம் :

உங்கள் குழந்தைகளுக்கு வீட்டில் உள்ள பழைய போட்டோக்கள், வீடியோக்களை காண்பியுங்கள். அந்த போட்டோவில் உள்ளவர்கள் யார் யார்? என்று குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யுங்கள். அவை உங்கள் குழந்தைகளுக்கு குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் மீது ஒரு தனி மரியாதையை உருவாக்கித்தரும்.

தியானம் :

உடல் ஆரோக்கியத்தில் நன்மை தருவதில் மிக முக்கிய பங்கு வகிப்பது தியானம். ஆனால் நம்மில் பலபேர் அதை செய்யமாட்டோம். ஏனென்றால் நமக்கு பொறுமை என்பதே இருக்காது. ஆனால் இப்போது உள்ள சூழ்நிலையில் நமக்கு பொறுமை அதிகமாகவே இருக்கும். எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி தியானம் செய்வதை உங்களின் அன்றாட பழக்கமாக மாற்றிக்கொள்ளுங்கள். அவை நிச்சயம் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை விளைவிக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lock down tips from may 10


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவுAdvertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவு
Seithipunal