உடல் எடையை குறைக்க நினைக்கிறீர்களா.? அப்போ இந்தப் பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்.! - Seithipunal
Seithipunal


உடல் எடையை குறைத்து ஃபிட்டாக இருக்க வேண்டும் என்பது  அனைவரின் ஆசை மற்றும் கனவு. அதற்காக விரைவாக உடல் எடையை குறைக்க இந்த பழங்களை காலையில் வெறும் வயிற்றில்  சாப்பிட்டு வந்தால் நமது உடல் எடையானது விரைவாக குறையும். அவை என்ன பழங்கள் என்று பார்ப்போம்.

மாதுளை:

மாதுளம் பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நம் உடல் எடையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இவற்றில் கலோரிகள் குறைவு ஆனால் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகம். மேலும் அதிக அளவிலான நார்ச்சத்தும் இருக்கிறது. இவற்றில் பாலிபினால் கலவைகளும் உள்ளன. மாதுளை உடல் எடை குறைப்பில் உதவுவதோடு வயிற்றுப் புண்களையும் ஆற்றும் சக்தி கொண்டது.

முலாம்பழம்:

முலாம்பழம் உடல் எடை குறைப்பிற்கு உதவக்கூடிய மற்றொரு பழமாகும். இந்த பழத்தில் உள்ள அதிக அளவிலான பொட்டாசியம் நம் உடலிலிருக்கும் கொழுப்பை கரைக்க பயன்படுகிறது. மேலும் இதிலிருக்கும் நீர்ச்சத்து நம் பசியை குறைத்து நிறைவான உணர்வை  கொடுக்கிறது. இதன் மூலம் எடை குறைப்பிற்கு உதவுகிறது.

பப்பாளி: 

பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் நம்ம அஜீரணத்தை எதிர்த்து போராடுகிறது. மேலும்  இதில் இருக்கக்கூடிய வைட்டமின் சி உடல் எடை குறைப்பிற்கு உதவுகிறது.

தர்பூசணி : 

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான பழங்களில் ஒன்று தர்பூசணி. இதில் வைட்டமின்கள் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து ஆகியவை அதிக அளவில் இருக்கின்றன. மேலும் இவற்றில் கலோரிகள் குறைவு. இவற்றை சாப்பிடும் போது நிறைவான உணர்வைத் தருவதோடு  நம் பசியை கண்டுபிடித்து உடலுக்கு தேவையான சக்தியையும் வழங்குகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

If you want to lose weight, eat these fruits on an empty stomach


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->