மாம்பழம் விரும்பி சாப்பிடுவீங்களா.. உஷார்.. இது உங்களுக்கு தான்.! - Seithipunal
Seithipunal


கோடைகாலத்தில் அதிகப்படியான மாம்பழ விற்பனை நிகழ்வதால் இயற்கையாக மாம்பழங்களை பழுக்க விடாமல் வியாபாரிகள் பழுக்க இரசாயனங்களை பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து பார்க்கலாம். 

இதனால் உடல் பலவீனம் அடைந்து நெஞ்செரிச்சல், வயிற்றுப்போக்கு,. வாந்தி மற்றும் அஜீரணம் உள்ளிட்ட தொந்தரவுகள் ஏற்படும். மேலும் தொண்டையில் புண் ஏற்படக்கூடும். 

மூச்சு சுவாச பிரச்சனைகள் மற்றும் குடல் புண் உள்ளிட்டவை ஏற்படலாம். அத்துடன் ரசாயன மாம்பழங்களின் காரணமாக நம்முடைய உடலில் உள்ள திசுக்களுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைப்பதில்லை. எனவே உடலில் இருக்கும் ஆக்சிஜன் குறைய தொடங்கி நரம்புகளில் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும்.. 

இயற்கையாக பழுத்த மாம்பழங்களின் நிறம் பொதுவாக சற்று மங்கலாக இருக்கும். ரசாயனம் கொண்டு பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் நன்றாக பார்க்க பளபளவென்று இருக்கும்.

மேலும் செயற்கையான பழங்களில் பெரிய அளவில் மனமும் சுவையும் இருக்காது. நீண்ட நாட்களுக்கு இது கெட்டுப் போகாமல் இருக்கும். 

இயற்கையான பழங்கள் சற்று நலிவுற்று காணப்படும். மேலும் அதில் அவ்வப்போது பூச்சிகளும் இருக்கும். 

ஆனால், செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களில் எந்தவித பூச்சிகள் இருக்காது. நாம் கடைகளில் வாங்குவதை விடுத்து உறவினர் வீடுகள் அல்லது மாமரம் வைத்திருப்பவர்களிடம் நேரடியாக வாங்கிக் கொள்வது இதற்கு தீர்வாக இருக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to buy mangos


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->