இதோ! முகத்தில் உள்ள மூக்கை அழகுபடுத்த சில வழிகள்...!
Here are some ways to beautify nose on your face
வெண் புள்ளி மறைய:
ஒரு பௌலில் ஓட்ஸ் மற்றும் தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.பின் அதை வெள்ளைப்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.பின்பு வெதுவெதுப்பான நீர் பயன்படுத்தி, அப்பகுதியை மென்மையாக ஸ்கரப் செய்து கழுவ வேண்டும்.இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தினால், வெள்ளைப்புள்ளிகள் வருவதைத் தடுக்கலாம்.

தும்மல் பிரச்சனை நீங்க:
சோம்பில் உள்ள ஆன்டி-பயாடிக் பண்புகள், தும்மல் பிரச்சனையில் இருந்து விடுவிக்கும். அதற்கு 2 டீஸ்பூன் சோம்பை ஒரு கப் சுடுநீரில் போட்டு நன்கு 15 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, தினமும் 2-3 முறை குடித்து வந்தால், தொடர்ச்சியாக வரும் தும்மல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
வெள்ளைப்புள்ளிகளைப் போக்க:
மூக்கைச் சுற்றியுள்ள வெள்ளைப்புள்ளிகளைப் போக்க வெந்தயத்தை நீரில் 5-6 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.பின் அதை நன்கு அரைத்து, அத்துடன் கற்றாழை ஜெல்லை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.பின்பு அந்த கலவையை முகத்தில் தடவி 10 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.இறுதியில் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
English Summary
Here are some ways to beautify nose on your face