குளிர்காலத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு வகைகள்.!! - Seithipunal
Seithipunal


குளிர்காலம் ஆரம்பித்துவிட்டது. குளிர் காலங்களில் ஏற்படும் ஜலதோஷம், காய்ச்சல் போன்ற நோய்களிடம் இருந்து நமது உடலை பாதுகாத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இந்த நேரத்தில் ஊட்டச்சத்து நிரம்பிய உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும்.

குளிர்காலத்தில் எந்தமாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதுபற்றி இந்த பகுதியில் பார்க்கலாம் வாங்க. குளிர் காலத்தில் சிறு தானியங்களை உணவில் கண்டிப்பாக சேர்த்துக்கொள்ளவேண்டும். சிறுதானியங்கள் உடலை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது.

வேர்க்கடலை உடலின் வலிமையை அதிகரிக்க உதவுகிறது. குளிர்காலத்தில் வேர்க்கடலை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. வேர்க்கடலை., உடலின் ஊஷ்ணத்தை சிரான நிலையில் வைக்க உதவுகிறது. தினமும் இதை சாப்பிடுவதால் நோய்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியும்.

இரவு தூங்குவதற்கு முன்பு., பசும்பாலில் சிறிதளவு மஞ்சள் தூள்., சிறிதளவு பனங்கற்கண்டு., கொஞ்சம் மிளகு சேர்த்து கொடுத்தால் உடலுக்கு மிகவும் நல்லது. இதனால்., ஜலதோஷம் தொடர்பான பிரச்சனைகள் வருவதை தடுக்கலாம். குளிர் காலத்தில் இஞ்சி டீ அருந்தினால் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

health tips 31


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->