கோடைகாலத்தில் குளுகுளு மாஸ்க்!! உங்கள் சருமத்தை பாதுகாக்க இதனை செய்யுங்கள்!! - Seithipunal
Seithipunal


துளசியின் மருத்துவ குணங்களை அறிந்தவர்கள் அதிகம் என்றாலும்., இன்றைய வாழ்க்கை சூழ்நிலையில் பலர் பல காரணங்களுக்காக அதனை உட்கொள்ள மறந்து வருகிறோம். வாரத்திற்கு ஒரு முறை அல்லது மாதத்திற்கு ஒரு முறை கோவில்களுக்கு செல்லும் சமயத்தில் கோவில்களில் வழங்கும் போது சாப்பிடுகிறோம். இப்போது துளசியின் அழகு பராமரிப்பு குறித்து தெரிந்துகொள்வோம். 

 

ஆரஞ்சு தோல் - துளசி: 

ஆரஞ்சு பழத்தின் காய்ந்த தோல் மூலமாக முக அழகானது பொலிவு பெரும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அந்த வகையில்., ஆரஞ்சு பழ தோளில் ருக்கும் வைட்டமின்-சி மூலமாக முகப்பருக்கள் நீக்கப்பட்டு., பொலிவை தரும். 

துளசியில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் மூலமாக சருமத்தில் இருக்கும் எண்ணெய் பசையானது குறையும்.  ஆரஞ்சு பழத்தின் தோலுடன் துளசியை நன்கு அரைத்து., முகத்தில் பருக்கள் இருக்கும் இடத்தில் தடவிக்கொண்டால்., பருக்கள் மறையும். 

முல்தானி மட்டி - துளசி: 

இரண்டு தே.கரண்டி முல்தானி மட்டி மற்றும் 10 துளசி இலைகளை எடுத்துக்கொண்டு., நன்றாக அரைத்து முல்தானி மட்டியுடன் கலக்கவும். இந்த கலவையுடன் சிறிதளவு ரோஸ் நீருடன் சேர்ந்து முகத்தில் பூசி., 20 நிமிடங்கள் கழித்து இதமான சூடு நீரில் கழுவினால் முகமானது பொலிவாக இருக்கும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்தல் போதுமானது. 

நெல்லிக்காய் பவுடர் - துளசி: 

இரண்டு தே.கரண்டி நெல்லிக்காய் பவுடர் மற்றும் 15 துளசி இலைகளை அரைத்து எடுத்து கொண்டு கலக்கவும். இந்த கலவையுடன் ஆலிவ் எண்ணையை இரண்டு தே.கரண்டி ஊற்றி நன்றாக சேர்த்து., தலையில் தேய்க்கவும். பின்னர் சுமார் 2 மணி நேரத்திற்கு பின்னர் மிதமான சூடுள்ள நீரில் அலசவே., இலநரைகள் அனைத்தும் சரியாகிவிடும். மேலும்., வாரத்திற்கு ஒரு முறை இதனை செய்வது நல்லது.  

முட்டை - துளசி: 

முட்டையின் வெள்ளை கரு மற்றும் 10 துளசி இலைகளை சேர்த்து நன்றாக கலக்கி முகத்தில் தேய்க்கவும். இதன் மூலமாக முகத்தில் உள்ள கிருமிகள் அனைத்தும் நீக்கப்பட்டு., முகமானது பொலிவு பெரும். மேலும்., இதன் மூலம் தோலும் இறுகிவிடும். 

எண்ணெய்கள்: 

நமது தலையில் அதிகளவில் தூசுகள் மற்றும் அலுக்ககள் சேர்வதன் காரணமாக பொடுகுகள் காணப்படுகிறது. இதனை தீர்பதற்க்காக துளசி எண்ணெய்., தேங்காய் எண்ணெய் மற்றும் பாதம் எண்ணையை சமமான அளவில் எடுத்து., தலையில் தேய்த்து குளித்து வர பொடுகு பிரச்சனையில் இருந்து விடுபடலாம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

face mask for summer


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->