40 வயதில் தொங்கும் தொப்பையை குறைக்க முடியலையா? கவலை வேண்டாம்... இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.! - Seithipunal
Seithipunal


தொப்பை என்பது ஆண் பெண் என இருபாலருக்குமே மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இளம் குறிப்பாக 40 வயதை தாண்டிய ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தொப்பை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. மாறிவரும் உணவு பழக்க வழக்கம் மற்றும் வாழ்க்கை முறையின் காரணமாக  இந்தப் பிரச்சனை தொடர்கிறது. சில எளிய உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் இதனை கட்டுப்படுத்தலாம். குறிப்பாக 40 வயதிற்கு மேல் பெண்களுக்கு ஏற்படும் தொப்பையை கட்டுப்படுத்துவதற்கான சில உணவுகளை நாம் பார்ப்போம்.

தேங்காய்:

தேங்காயில் நல்ல கொழுப்புகள்  நிறைந்து இருக்கிறது. இவை நமது பசியை போக்கி நீண்ட நேரம் இந்த உணவுகளையும் எடுத்துக் கொள்ளாமல் இருக்க உதவும். இதன் காரணமாக உடல் எடை குறைவதோடு உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

மஞ்சள்:

மஞ்சள் ஒரு சிறந்த கிருமி நாசினியாக பயன்படுவதோடு இவற்றில் ஏராளமான மருத்துவ குணங்களும் உள்ளன. இவை நம் வயிற்றில் உள்ள கொழுப்புகளை கரைத்து தொப்பையை குறைக்க மிகவும் பயன்படுகிறது. 40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் தினமும் உணவில் ஒரு டீஸ்பூன் மஞ்சள் சேர்த்துக் கொள்வதால் தொப்பை ஏற்படும் வாய்ப்புகள் குறையும்.

வெந்தயம்:

நம் வயிற்றுப் பகுதியில் சேர்ந்திருக்கும் கொழுப்பை கரைப்பதில் வெந்தயம் முக்கிய பங்கு வைக்கிறது. இதில் இருக்கக்கூடிய சத்துக்கள் வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கின்றன. இதன் காரணமாக நமது செரிமானம் மேம்படுவதோடு கொழுப்புக்களை கரைக்கவும் உதவுகிறது.

கீரைகள்:

40 வயதை தாண்டிய பெண்கள் உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு உணவு கீரை. இதில் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. கீரையல் இருக்கக்கூடிய நார்ச்சத்து நம் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.  மேலும் நீண்ட நேரம் பசிக்காமல் இருக்க உதவுகிறது. இதன் காரணமாக கொழுப்பு கரைவதோடு தொப்பையை குறைக்கவும் பயன்படுகிறது.

பொரிகடலை:

நார்ச்சத்து மற்றும் புரதச்சத்துக்கள் அதிகமாக இருக்கின்ற இந்த கடலை குறைந்த அளவு கலோரிகளையே கொண்டது. இதனை சாப்பிடுவதால் பசி உணர்வு கட்டுப்படுவதோடு உடல் செரிமானத்திற்கு உதவுகிறது. இந்தக் கடலையை தொடர்ந்து எடுத்து வரும்போது உடல் எடை குறைவதோடு, தொப்பையும் வராமல் பாதுகாக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dont worry about belly fat at 40 take these foods


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->