தூக்கமின்மையால் அவதியா.?! இந்த டீ உங்களுக்கு சூப்பர் பலன் கொடுக்கும்.! - Seithipunal
Seithipunal


பகல் முழுவதும் வேலை செய்பவர்களுக்கு இரவு நிம்மதியான மற்றும் முழுமையான தூக்கம் மிக முக்கியம். நமக்கு ஏதாவது காரணங்களால் தூக்கமின்மை ஏற்பட்டால் நாம் மிக சோர்வாக உணர்வோம்

இது நமது மறுநாள் வேலையில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும். சிலருக்கு படுத்த உடனேயே தூக்கம் வந்துவிடும். ஆனால் சிலருக்கு என்ன செய்தாலும் இரவு முழுவதும் உறக்கம் வராது. 

இந்த தூக்கமின்மைக்கு முக்கிய காரணம் ஹார்மோன் இம்பேலன்ஸ் எனப்படும் ஹார்மோன் சமநிலைஇன்மை பிரச்சனை. இந்த பிரச்சனை இருந்தால் பரிந்துரைக்கப்படும் இந்த டீயை குடிப்பது உங்களுக்கு உதவும்.

தேவையான பொருட்கள் : 

அதிமதுரம் - 1/2 டீஸ்பூன்

சுக்கு (உலர்ந்த இஞ்சி தூள்) - 1/4 டீஸ்பூன்

அஸ்வகந்தா - 1/4 டீஸ்பூன்

இலவங்கப்பட்டை - 1/4 தேக்கரண்டி

செய்முறை : 

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி எடுத்து வைத்துள்ள பொருட்களை அந்த தண்ணீரில் போடவும். தண்ணீர் பாதி அளவு வரும் வரை அதை நன்றாக கொதிக்க விடவும். 

தூங்கச் செல்லம் முன் அரை மணி நேரத்திற்கு முன் இந்த தேநீரை குடித்துவிட்டு படுத்தால் தூக்கம் நன்றாக வரும். 

பயன்கள் :

இதில் நிறைய ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் இருப்பது நமது மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இஞ்சி தூக்க ஹார்மோனை சுரக்க வைக்கிறது. அதிமதுரமானது மனதை அமைதிகொள்ள வைப்பதால் இது மெலடோனின் ஹார்மோனை உற்பத்தி செய்து தூக்கத்தை சீர் செய்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Best tea for night sleeping


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->