முதன்மையான நவீனத் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர்... யார் இவர்? - Seithipunal
Seithipunal


குறிப்பிடத்தக்க ஒரு தமிழ் எழுத்தாளர்...

முதன்மையான நவீனத் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர்...

மனதிலிருந்து சொல்லும் நல்ல கதைகளின் பதிவாளர்...

மானுட சாரத்தை எழுத்தில் பிழிந்து கொடுத்து மயக்கும் ஜாலம் கைவரப் பெற்றவர்...

கனடா இலக்கியத் தோட்ட அமைப்பின் நிறுவனர்... 

இவர் தான் சிறுகதைகள், கட்டுரைகள், நேர்காணல்கள், நாவல்கள் என படைப்புகளை படைத்துக் கொண்டிருக்கும் 

அ.முத்துலிங்கம்...!! 

பிறப்பு :

அ.முத்துலிங்கம் 1937ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி இலங்கை வடமாகாணத்தில், யாழ்ப்பாண மாவட்டத்தில், கொக்குவில் என்னும் சிற்றூரில் அப்பாத்துரை-ராசம்மா இணையருக்கு மகனாய் பிறந்தார். 

பள்ளிப்படிப்பை கொக்குவில் உள்ள இந்துக்கல்லூரியிலும், யாழ்ப்பாணக் கல்லூரியிலும் முடித்தார். பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானத்தில் பட்டம் பெற்ற பின் இலங்கையில் பட்டயக் கணக்காளர் தேர்விலும், இங்கிலாந்தில் முகாமைத்துவ பட்டயக் கணக்காளர் தேர்விலும் வெற்றி பெற்றார்.

திருமணம் : 

அ.முத்துலிங்கத்தின் மனைவியின் பெயர் கமலரஞ்சனி ஆவார். மகன் சஞ்சயன், மகள் வைதேகி.

எழுத்துப்பணி : 

அ.முத்துலிங்கத்தின் முதல் சிறுகதை 'கடைசி கைங்கரியம்" சுதந்திரன் இதழில் 1958ஆம் ஆண்டு வெளியானது.

1964ஆம் ஆண்டு பேராசிரியர் க.கைலாசபதியின் அணிந்துரையுடன் 'அக்கா" என்னும் சிறுகதைத் தொகுப்பு வெளியானது.

நீண்ட இடைவெளிக்குப் பின் 1995ஆம் ஆண்டு திகடசக்கரம் என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டு மீண்டும் எழுத வந்தார். 

உண்மை கலந்த நாட்குறிப்புகள் இவருடைய முதல் நாவல் ஆகும். பிறகு (2008) கடவுள் தொடங்கிய இடம் என்னும் நாவல் 2011-ல் ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்தது. இவரின் நாவல்கள் கதைக்கொத்து போன்ற அமைப்பு கொண்டவையாக இருக்கும்.

தமிழிலக்கியத்திற்கு அ.முத்துலிங்கத்தின் தனிச்சிறப்பான பங்களிப்பு என்று குறுங்கட்டுரை வடிவத்தை சொல்லலாம். தன் சொந்த வாழ்க்கை, வாசிப்பு ஆகியவற்றை ஒட்டி அனுபவக் குறிப்பாகவும், அவதானிப்புகளாகவும், மெல்லிய அங்கதத்துடன் எழுதப்படும் அவருடைய கட்டுரைகள், கதைகளுக்கு நிகராகவே படைப்பூக்கம் கொண்டவையாக கருதப்படுகின்றன.     

சிறுகதைகள், கட்டுரைகள், நேர்காணல்கள், நாவல்கள் என விரியும் அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் வடிவ ஒழுங்கும், கலையழகும், அங்கதத்தன்மையும் கொண்டவையாக இருக்கும்.

பரிசுகளும், விருதுகளும் : 

தினகரன் சிறுகதைப் போட்டி பரிசு - 1961.

கல்கி சிறுகதைப் போட்டி பரிசு.

திகடசக்கரம் - லில்லி தேவசிகாமணிப் பரிசு - 1995.

வம்சவிருத்தி - சிறுகதைத் தொகுப்பு - தமிழ்நாடு அரசாங்கம் முதல் பரிசு - 1996.

வம்சவிருத்தி - சிறுகதைத் தொகுப்பு - இந்திய ஸ்டேட் வங்கி முதல் பரிசு - 1996.

ஜோதி விநாயகம் பரிசு - 1997.

வடக்கு வீதி - சிறுகதைத் தொகுப்பு - இலங்கை அரசு சாகித்தியப் பரிசு - 1999.

கனடா தமிழர் தகவல் - நாற்பது ஆண்டு தமிழ் இலக்கியச் சாதனை விருது - பிப்ரவரி 2006.

திருப்பூர் தமிழ்ச் சங்கம் விருது - 2012.

குதிரைக்காரன் - சிறுகதைத் தொகுப்பு - 2012ன் சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான விகடன் விருது.

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் தமிழ்ப்பேராய விருது - 2013.

மார்க்கம் நகரசபை இலக்கிய விருது - 2014.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a muthulingam history in tamil


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->