கோதுமை மாவு இருக்கா??..!! இனி இத செஞ்சி பாருங்க..!! - Seithipunal
Seithipunal


அப்பம் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். பொதுவாக கோதுமை மாவில் பூரி, சப்பாத்தி, தோசை போன்றவையே செய்வோம் ஆனால் இப்போது அப்பம் செய்வது எப்படி என பார்ப்போம்

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 1 கப்
அரிசி மாவு - 2 மேஜைக்கரண்டி
வெல்லம் - 1/2 கப்
வாழைப்பழம் - 1
ஏலக்காய் - 1
சமையல் சோடா - 1 சிட்டிகை
உப்பு - 1 சிட்டிகை
எண்ணெய் அல்லது நெய் - பொறிக்க தேவையான அளவு

செய்முறை:

முதலில் வெல்லத்தை பாகுகாய்ச்சி கொள்ளவும்.கோதுமைமாவு, அரிசி மாவு, ஆகியவற்றை நன்கு கலக்கவும் அதில் தேவையான அளவு சோடா உப்பு சேர்க்கவும்.இதனுடன் பாகு காய்ச்சி சேர்கவும்.அதில் காய்சி வைத்துள்ள வெல்ல பாகை சேர்க்கவும்.

பின்னர் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒரு குழிக்கரண்டி மாவு எடுத்து எண்ணெயில் ஊற்றவும். ஒரு தடவைக்கு நான்கு அப்பங்கள் வீதம் ஊற்றவும். ஒரு நிமிடம் கழித்து திருப்பி போடவும். நன்கு வேகும்வரை பொரித்து சிவந்தவுடன் எடுத்து வைக்கவும். இப்போது சுவையான கோதுமை அப்பம் ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

wheat Appam Recipe


கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?Advertisement

கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?
Seithipunal