பெண்ணின் பிறப்புறுப்பில் எத்தனை வகை உள்ளது?.! பிறப்புறுப்பின் துர்நாற்றத்திற்கான காரணம் என்ன?..!!
types of vagina and reasons of smell in birth part for girls
பெண்களின் பிறப்புறுப்பை பொறுத்த வரையில் பெரும்பாலானோர் அதனை குறைவாக மதிப்பிடுவதும் இருந்து வருகிறது. பெண்களின் அழகிற்கும் - அமைதிக்கும் - வலிமைக்கும் வழிவகுப்பது பெண்களின் பிறப்புறுப்பு ஆகும். பெண்களின் மிகப்பெரிய பலத்திற்கு வழிவகுக்கும். பெண்களின் பிறப்புறுப்பு என்பது நமது கைகளில் இருக்கும் கை ரேகைகளை போலத்தான்.
உலகில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் கைரேகையில் இருக்கும் மாற்றத்தை போன்று பிறப்புறுப்பும் வெவ்வேறாக இருக்கும். அந்தந்த வயது மற்றும் சுற்றுப்புற சூழ்நிலை என பல விதமான காரணத்தையும்., காரணிகளையும் பொறுத்து மாறுபடும். பெண்களின் பிறப்புறுப்பில் அவ்வப்போது லேசான துர்நாற்றம் வருவதும் இயல்பான ஒன்றுதான்.

இந்த துர்நாற்றமானது சில சமயத்தில் அதிகமாக இருக்கும் பட்சத்தில்., பிறப்புறுப்பு பகுதியில் ஏற்பட்டு இருக்கும் நோயின் தாக்கம் மற்றும் தொற்றுகள் அதிகரிப்பதன் விளைவாகவே இந்த துர்நாற்றம் ஏற்படுகிறது. ஆரோக்கிய நிலையில் இருக்கும் பெண்ணில் இருந்து வெளியேறும் திரவத்தின் pH அளவானது 4.5 ஆகும்.
பாக்டீரியாவின் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதன் விளைவாகவே., பெண்ணுறுப்பில் இருந்து வெளியேறும் திரவத்தின் மூலமாக துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்த துர்நாற்றமானது அழுகிய மீன் போன்று உணரக்கூடிய பட்சத்தில் இருந்தால் Vaginosis நோய்த்தொற்றின் அறிகுறியாக இருக்கவும் வாய்ப்புள்ளது. இவ்வாறு பாதிப்பு இருக்கும் பட்சத்தில் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

இந்த சமயத்தில் அரிப்புடன் துர்நாற்றமும் ஏற்பட்டால் ஈஸ்ட் நோய் தொற்றாக இருக்கவும் வாய்ப்புள்ளது. இதனைப்போன்று சிறுநீர் பாதையில் பாக்டீரியா தொற்று இருந்தால் அமோனியா வாசனையை போன்றவாறு இருக்கும். இந்த பிரச்சனையை சரி செய்வதற்கு அதிகளவு தண்ணீரை குடிக்க வேண்டும். தண்ணீரை தொடர்ந்து குடித்து வந்தாலும் இந்த பிரச்சனை சரியாகவில்லை என்றால் மருத்துவரை நாடுவது நல்லது.
இதனைத்தவிர்த்து மாதவிடாயின் போது பொதுவாக ஏற்படும் துர்நாற்றமானது இயல்பாக சிறிதளவு இருக்கும். இந்த துர்நாற்றம் மாதவிடாயின் போது அதிகமாக இருந்தால் இரும்பு சத்தின் குறைபாடாக இருக்கும். பெண்களின் பெண்ணுறுப்பு அல்லது பிறப்புறுப்பை பொறுத்தவரையில் அதனை நான்காக வகைப்படுத்தலாம்.
அதன் வகைகளாவது 1)தாமரை மொட்டுபோல் குவிந்த பெண்ணுறுப்பு 2)வளர்பிறை போல் வட்டமான பிறப்புறுப்பு 3)மடிப்பாகச் சேர்ந்திருக்கும் பிறப்புறுப்பு 4)எருமை நாக்குபோல் தடித்த பிறப்புறுப்பு என்று வகைப்படுத்தலாம்.

அனைத்து பெண்களின் பெண்ணுறுப்பிற்கு அருகே ஆண்குறி போன்று நாடி போல ஒன்று இருக்கும். இந்த நாடியை பெண்கள் சுழற்றினாலோ அல்லது துணையுடன் இணையும் நேரத்தில் தாம்பத்திய விளையாட்டுகளின் போது செய்யும் செயலால் தாம்பத்திய உணர்வானது அதிகமாகும். தாம்பத்தியத்தில் தம்பதிகளின் அனைத்து நிலைகளுக்கான புணர்ச்சி மற்றும் கலவிக்கு இப்பகுதி சரியானது..
பெண்களின் பிறப்பிற்கும் - மூளைக்கும் இடையேயான நேரடி தொடர்ப்பு அதிகளவில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாகவே தாம்பத்தியத்தின் போது உச்சகட்டத்தை அடையும் நேரத்திற்கு முன்னதாக மூளையிடம் இருந்து சமிக்கைகள் பெறப்பட்டு., தாம்பத்தியத்தின் போது அதிகளவிலான எதிர்பார்ப்பு மற்றும் ஆர்வம் தொடர்ந்து அதிகரிக்கிறது.

ஆண்களை பொறுத்த வரையில் தாம்பத்தியத்தின் போது ஒரு முறை மட்டுமே உச்சகட்டத்தை அடைய இயலும்.. ஆண்கள் உச்சகட்டத்தை அடைந்ததன் விளைவாக வெளியேறும் விந்தணுக்கள் வெளியேறிய சில மணித்துளிகள் அல்லது இளைப்பாறிய பின்னரே மீண்டும் தாம்பத்தியத்தை முயற்சிக்கலாம். ஆனால் பெண்களுக்கு இது நேர்மறையாக இருக்கும். தொடர்ந்து பல முறை பெண்கள் உச்சத்தை அடையலாம்.
இந்த உச்சக்கட்டம் தொடர்ந்து அடைவதற்கு பெண்ணுறுப்பின் அமைப்பு மற்றும் பெண்களின் நரம்பு மண்டலத்தின் அமைப்பு முறை மட்டுமே காரணம். பெண்களின் உணர்வை தூண்டும் கிளிட்டோரஸ் பகுதி மிகவும் சிறிய அளவானது என்று நம்மில் பெரும்பாலானோர் எண்ணியிருப்போம். கிளிட்டோரஸ் பகுதியானது மிகவும் பெரியதாகும்.

இது சராசரியாக சுமார் 8000 நரம்புகளின் முடிவாக கிளிட்டோரஸில் இணைகிறது. 18 வகையான வெவ்வேறு நரம்பு மண்டலத்தின் இணைப்பாகும். பெண்களின் பிறப்புறுப்பு என்பது புனிதமான ஒன்றாகும். இதன் மூலமாகவே உலகின் எதிர்கால சந்ததிகள் பிறக்கின்றனர். தமிழ் திரைப்படத்தில் உள்ள பாடலில் "தண்ணீர் கடலில் பிறக்கிறோம்.. தண்ணீர் கரையில் முடிக்கிறோம்" என்று பெண்ணின் பெருமை உணர்த்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஆரோக்கியமாக பிறப்புறுப்பை பாதுகாப்பது இருபாலருக்கும் பொதுவான ஒன்றாகும்..
Tamil online news Today News in Tamil
English Summary
types of vagina and reasons of smell in birth part for girls