டேஸ்டியான பாலடை பாயாசம்.! செய்வது எப்படி.?
Tasty Palada payasam recipe
டேஸ்டியான பாலடை பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க,
தேவையான பொருட்கள்:
பாலடை - 1/2 கப்
பால் - 2 கப்
சர்க்கரை - 1/2 கப்
ஏலக்காய்த் தூள் - ஒரு சிட்டிகை
குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
நெய் – சிறிதளவு
முந்திரி - 7
துருவிய பாதாம் - சிறிதளவு
உலர்ந்த திராட்சை - 5
செய்முறை:
முதலில் அடுப்பில் கடாயை வைத்து நெய் விட்டு சூடானதும், துருவிய பாதாம், முந்திரி திராட்சையை வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும். பின்பு அதே கடாயில் பாலடையைப் போட்டு வறுத்து, தனியாக எடுத்துக்கொள்ளவும்.
பின்பு அடி கனமான வாணலியில் பால் விட்டுக் கொதி வந்ததும், பாலடையைப் போட்டு நன்கு வேக வைக்கவும். பிறகு சர்க்கரை, ஏலக்காய்ப் பொடி சேர்த்து நன்கு கலக்கவும். பின்பு வறுத்த முந்திரி, திராட்சை பாதாம் மற்றும் குங்குமப்பூ சேர்த்தால் சுவையான பாலடை பாயாசம் ரெடி.
English Summary
Tasty Palada payasam recipe