ஒரே கடியில் தேன் பொங்கும் இனிப்பு...! - Luqaimat அரேபிய டெசர்ட்களின் செல்லப்பிள்ளை...!
sweet treat that oozes honey one bite Luqaimat darling Arabian desserts
Luqaimat என்பது Saudi Arabia உள்ளிட்ட அரேபிய நாடுகளில் மிகவும் பிரபலமான இனிப்பு உணவு. சிறிய மாவு உருண்டைகளை எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து, அதன் மேல் தேன் அல்லது பேரீச்சம் பழ சாறு (date syrup) ஊற்றி பரிமாறப்படுகிறது. வெளியில் crispy, உள்ளே மென்மையான அமைப்பு இதன் முக்கிய சிறப்பாகும்.
தேவையான பொருட்கள் (Ingredients)
மைதா மாவு – 2 கப்
ஈஸ்ட் – 1 டீஸ்பூன்
சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – சிறிதளவு
வெந்நீர் – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
தேன் அல்லது பேரீச்சம் பழ சாறு – மேலே ஊற்ற

செய்முறை (Preparation Method)
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, ஈஸ்ட், சர்க்கரை, உப்பு சேர்த்து கலக்கவும்.
வெந்நீர் சேர்த்து லேசாக ஒட்டும் மாவாக தயார் செய்யவும்.
மாவை மூடி வைத்து 1 மணி நேரம் புளிக்க விடவும்.
ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கவும்.
மாவை சிறிய உருண்டைகளாக எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரிக்கவும்.
பொரித்த உருண்டைகளை tissue-ல் எடுத்து excess எண்ணெயை வடிக்கவும்.
மேலே தேன் அல்லது date syrup ஊற்றி சூடாக பரிமாறவும்.
சிறப்பு என்ன?
Luqaimat வெளியில் குருமுருப்பாகவும், உள்ளே மென்மையாகவும் இருக்கும். தேன் அல்லது பேரீச்சம் பழ சாறு சேர்க்கப்படுவதால் இனிப்பு சுவை அதிகரிக்கிறது. ரமலான் காலங்களில் மிகவும் பிரபலமான இந்த இனிப்பு, அரேபிய விருந்துகளில் முக்கிய இடம் பெறுகிறது.
English Summary
sweet treat that oozes honey one bite Luqaimat darling Arabian desserts