கடைகளில் வாங்காமல் வீட்டிலேயே சுவையான ரவா சீடை செய்து கொடுத்து அசத்துங்கள்..! - Seithipunal
Seithipunal


மாலை வேளையில் சுவையான ஸ்நாக்ஸ் சாப்பிட அனைவரும் விரும்புவோம். கடைகளில் வாங்காமல் வீட்டிலேயே சுவையான ரவா சீடை எப்படி செய்வது என பார்போம்.

தேவையானவை:

ரவை - கால் கப்
ஜவ்வரிசி - அரை கப்
பச்சைமிளகாய் விழுது - 2 டீஸ்பூன்
புளித்த தயிர் - ஒரு கப்
பெருங்காயத்தூள் - சிறிதளவு
எள் - ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

பச்சரிசி - 2 கப்

செய்முறை :

அரிசியை ஊறவைத்து வடிகட்டி நிழலில் உலர்த்தவும்.  பின் அதனை மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.  சிறுதீயில் கடாயை வைத்து அதில் மாவை கொட்டி வறுத்தெடுக்கவும்.பின்னர் சலித்து எடுத்து கொள்ளவும்.
ஜவ்வரிசி, ரவையுடன் தயிரை ஊற்றி ஐந்து மணி நேரம் ஊறவையுங்கள். அதனுடன் மாவை சேர்த்து கிளறவும். அதில், மிளகாய் விழுது, பெருங்காயத்தூள், எள், உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி அது காய்ததும் சிறு உருண்டைகளாக உருட்டி பொறித்தெடுக்கவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rava seedai Recipe


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->