சத்தான கேழ்வரகில் சுவையான ஆலு பரோட்டா..!  - Seithipunal
Seithipunal


ராகி ஆலு பரோட்டா சத்தான, சுவையான உணவாகும். இதனை வீட்டில் இருந்தபடியே எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையானப் பொருட்கள் :

கோதுமை மாவு - 2 கப்
எண்ணெய் - தேவையான அளவு
ராகி மாவு - 2 கப்
மிளகாய் தூள் - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
சீரகத்தூள் - சிறிதளவு
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
ஓமம் - சிறிதளவு
பெருங்காயத்தூள் - சிறிதளவு
ஆலு மசாலாவிற்கு :
பெரிய வெங்காயம் - 2 
உருளைக்கிழங்கு - 3 
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
தயிர் - 4 தேக்கரண்டி

செய்முறை :

முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி மற்றும் கோதுமை மாவை போட்டு தயிர், சிறிது உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

பின்னர் வெங்காயம், கொத்தமல்லித்தழையை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பிறகு உருளைக்கிழங்கை நன்றாக வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் போட்டு வதக்க வேண்டும்.

பின் அதில் மஞ்சள் தூள், பெருங்காயம், ஓமம், மிளகாய் தூள், சீரகத்தூள், தேவையான அளவு உப்பு, கொத்தமல்லித்தழை மற்றும் உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக கலந்து ஆலு மசாலாவை தயார் செய்து, அதனை ஆறவைக்க வேண்டும்.

பின் தயார் செய்து வைத்திருக்கும் ராகி மற்றும் கோதுமை மாவில் ஒரு உருண்டை எடுத்து அதன் நடுவில் ஆலு மசாலாவை வைத்து மூடி பரோட்டாவாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.

கடைசியாக தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் உருட்டி வைத்துள்ள பரோட்டாவை தேய்த்து, தோசைக் கல்லில் போட்டு இருபுறமும் வேக வைத்து எடுத்தால், சத்தான ராகி ஆலு பரோட்டா தயார்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Raagi aalu parotta preparation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->