இனி செயற்கை லாஷஸ் வேண்டாம்., இமை முடிகளை அதிகரிக்க இயற்கை முறைகள்..! - Seithipunal
Seithipunal


கண்கள் தான் ஒருவரின் அழகை பிரதிபலிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. கண்களுக்கு புருவங்கள் எவ்வளவு அழகோ அதேபோல இமை முடிகள் அதிகமாக இருப்பதும் ஒரு அழகு தான். அடர்த்தியான இமை முடிகள் இருப்பது கண்களை அழகாக காட்டும். 

இமைகளில் சிலருக்கு அடர்த்தி குறைவாக இருக்கும். அவர்கள் செயற்க்கையாக இமைகள் வைத்து கொள்வர். ஆனால், இயற்கையாக புருவங்களை அடர்த்தியாக்க சில வழிமுறைகளை பின்பற்றலாம் அவை என்னவென பார்போம்.

ஆமணக்கு எண்ணெய் : இந்த எண்ணெயை தூங்க செல்வதற்கு முன் இமைகளில் மசாஜ் செய்து காலையில்  கழுவ வேண்டாம். விளக்கெண்ணெய் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.

தேங்காய் எண்ணெய் : தேங்காய் எண்ணெய்யுடன் 1 துளி லாவெண்டர் எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும், இந்த எண்ணெய்யை கொண்டு இமைகளில் நன்கு மசாஜ் செய்யலாம். தினமும் இதனை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பாதாம் எண்ணெய் : பாதம் எண்ணெய்யை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் இமை முடிகள் வலுவாகும். கண்களை மூடிக்கொண்டு இமை முடிகளில் பாதாம் எண்ணெய் சில துளிகள் எடுத்து மசாஜ் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

கிரீன் டீ, கற்றாழை : கிரீன் டீயை பஞ்சில் தோய்த்து கண் இமைகளின் மேல் 10 நிமிடங்கள் வரை வைக்கலாம். இது இமைகளில் ய்ள்ள முடி வளர்ச்சிக்கு உதவும்.

பெட்ரோலியம் ஜெல்லி : பெட்ரோலியம் ஜெல்லியை இமை மீது வளரும் முடிகள் மீது தடவுவதன் மூலம் முடி வளர்ச்சி அதிகரிக்கும். வறண்ட சருமத்தை சீரமைக்க பெட்ரோலியம் ஜெல் பயன்படுத்தலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Naturally helps eyelid hair growth


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal