வித்தியாசமான சுவையில் 'புதினா உருளைக்கிழங்கு மசாலா' இப்படி ட்ரை பண்ணுங்க.!
Mint Potato Masala recipe in tamil
சுவையான புதினா உருளைக்கிழங்கு மசாலா எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு
பச்சை பட்டாணி
தக்காளி
பெரிய வெங்காயம்
பச்சை மிளகாய்
எண்ணெய்
உப்பு
கடுகு
உளுத்தம் பருப்பு
பெருங்காயத்தூள்
கருவேப்பிலை
மஞ்சள் தூள்
முந்திரி
புதினா
இஞ்சி
பூண்டு
பட்டை
கிராம்பு
ஏலக்காய்
செய்முறை:
முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். ஒரு மிக்ஸி ஜாரில் புதினா, இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும். விருது நன்றாக வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் உப்பு, மஞ்சள் தூள், தக்காளி வேக வைத்துள்ள உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி சேர்த்து நன்றாக வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
மசாலா நன்றாக கொதித்ததும் கடலை மாவு, பொட்டுக்கடலை இரண்டையும் தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்து மசாலாவில் ஊற்றி கலந்து விடவும்.
பின்னர் உருளைக்கிழங்கு மசாலா கெட்டியானதும் வறுத்த முந்திரி சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான புதினா உருளைக்கிழங்கு மசாலா தயார்.
English Summary
Mint Potato Masala recipe in tamil