மாதவிடாய் கோளாறு பிரச்சனைகளை சரி செய்யும் மலைவேம்பு..! - Seithipunal
Seithipunal


உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு நமது நாட்டில் இருக்கும் பல மூலிகைகள் மருந்தாக இருக்கிறது. பிற மருந்துகளை விட இயற்கை மூலிகை மருந்துகள் நல்ல பலனை ஏற்படுத்துகிறது. இதில் பக்க விளைவுகளும் கிடையாது. பல பகுதிகளில் எளிதாக கிடைக்கும் மலைவேம்பு வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியேற்றும் சக்தியை கொண்டது. ஈரலுக்கு நல்ல பலத்தினை தரும். மாதவிடாய் பிரச்சனைகளை சரித்து, மாதவிடாயை முறைப்படுத்தும். புண்கள் சரியாகவும், காய்ச்சலை குணமாக்கவும் மலைவேம்பு உதவி சேகரித்து.

மலைவேம்பு இயற்கையாகவே தன்னகத்தே பல மருத்துவ குணங்களை கொண்டது. மலைவேம்பு நுண்கிருமிகள் மற்றும் பூஞ்சை காலனை போக்கும் தன்மை கொண்டது. மாதவிடாய் பிரச்சனையை சரி செய்யவும், மலட்டு தன்மையை போக்கவும், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி, இடுப்பு வலி போன்றவற்றையும் சரி செய்யும் குணம் கொண்டது. ஈரலுக்கு நல்லதொரு பலம், சிறுநீர் பெருக்கம் அதிகரித்தல், சிறுநீரக கற்களை கரைப்பது போன்ற பல பலன்களை தருகிறது.

மாதவிடாய் கோளாறுகளை சரி செய்ய : 

மாதவிடாய் கோளாறுகள் ஏற்படும் பட்சத்தில் சிறிதளவு மலைவேம்பு இலை, மிளகு, சீரகம் மற்றும் தேன் ஆகிய பொருட்களை முதலில் எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் பாத்திரத்தில் தேனை தவித்து பிற பொருட்களை சேர்ந்து நீர் விட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் இதனுடன் ஊறவைத்த நெல்லி வற்றலை சேர்த்து, வடிகட்டி தேனுடன் சேர்த்து குடித்து வர மாதவிடாய் கோளாறு சரியாகும். வயிற்று வலியும் குறையும். 

பேன் தொல்லை சரி செய்ய : 

பேன் தொல்லை இருக்கும் பட்சத்தில் மலைவேம்பு இலை, தேங்காய் எண்ணெய் ஆகிய பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் பச்சை இலையை நன்றாக அரைத்து, வானலியில் போட்டு களிபோல ஆகும் வரை கிளறவும். சூடு ஆறியதும் தலையில் தேய்த்து 15 நிமிடத்திற்கு பின்னர் குளித்து வந்தால் பேன்கள் தொல்லை சரியாகும். வாதத்தால் ஏற்படும் தலைவலி பிரச்சனை சரியாகும். இளநரை பிரச்சனை சரியாகும்.

இதனைப்போன்று காயத்தினை சரி செய்ய மலைவேம்பு இலை, நல்லெண்ணெய், மஞ்சள், எலுமிச்சையை எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் நல்லெண்ணெய், மலைவேம்பு இலையை பசை போல அரைத்து கலக்கியதும், எலுமிச்சை சாறினை சேர்த்து கிளறவும். பின்னர் மஞ்சள் பொடியை சேர்த்து கிளறிவிட்டு ஆறாத புண்கள் மற்றும் பூஞ்சையால் ஏற்படும் காளான் தொற்று பாதிக்கப்பட்ட இடத்தில் தடவும். இதனை தொழுநோய் புண்கள் பாதிக்கப்பட்டுள்ள இடங்களிலும் பயன்படுத்தலாம்.

மலைவேம்பு புற்றுநோய் புண்களை சரி செய்யும் குணம் கொண்டது. சர்க்கரை நோய், காய்ச்சல் போன்ற பிரச்சனைக்கும் மருந்தாக இருக்கிறது. கண்களை சுற்றி ஏற்படும் கருவளையத்தை சரி செய்யவும் உபயோகம் ஆகிறது. கருவளையத்தை சரி செய்ய நந்தியாவட்டை பூ, தேங்காய் எண்ணையை சேர்த்து 4 நாட்கள் சூரிய வெளிச்சத்தில் வைக்க வேண்டும். பின்னர் அந்த எண்ணெய்யை கண்களை சுற்றி பூசி வர கருவளைய பிரச்சனை சரியாகும்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Menstruation cycle problems solved by Malai Vembu or Chinaberry Melia azedarach


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->