பெண்கள் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள்.!  - Seithipunal
Seithipunal


பல இடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு பல நேரங்களில் கேள்விக்குறியாக உள்ள நிலையில் தற்காப்பு கலைகளை கற்பது பெண்களுக்கு மிகவும் முக்கியம்.

பெண்களுக்கு எதிரான பாதிப்புகளை அவர்களே எதிர்கொண்டு தம்மை தாமே பாதுகாத்துக் கொள்ள தற்காப்பு கலையைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று கூறினால் மிகையாகாது.

உடல் ஆரோக்கியம், மனதைரியம், தற்காப்பு கலை நுணுக்கத்தை பெண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

பிறரால் தமக்கு பாதிப்பு நேர்ந்தால் சுலபமாக அவர்களிடம் இருந்து எப்படி தப்பிப்பது? போன்ற சில யுக்திகளையும் பெண்கள் தெரிந்து வைத்துக் கொள்வது மிகவும் சிறந்தது.

உடலின் பலவீனமான பகுதிகளாக கண்கள், காதுகள், தொண்டை போன்றவை உள்ளன. பலமான பகுதிகளாக முன் நெற்றி, தோள்பட்டைகள், கால், கைமுட்டி, இடுப்பு, பின் பகுதி, குதிகால், கால் முன் பகுதி உள்ளன.

சமூகவிரோதிகள் பெண்களிடம் நகைகளை பறிக்கவோ, தவறான நோக்கத்திலோ அணுகினால் இவர்களை நாம் ஆயுதங்களால் தாக்க வேண்டியது இல்லை.

கை, கால்களால் தாக்கினால் போதும். நகையை பறிப்போரை கண்டு அலறாமலும், விலகி ஓடாமலும் அவர்களின் கையை பிடித்து காதுகளை தாக்க வேண்டும்.

பெண்கள் ஆண்களின் பிடியில் இருந்து விடுபட, உடலில் 'ஜாயின்ட்" உள்ள இடங்களை தாக்க வேண்டும். 

பின்னால் வந்து செயின் பறிப்போர், தவறாக நடக்க முயல்வோரை பின்னங்கால்களால் தாக்கலாம். கைப் பையை பறித்து செல்வோரை விரட்டி கண்கள், காதுகளில் தாக்க வேண்டும். 

சில நேரங்களில் சாவியை பயன்படுத்தியோ, துப்பட்டாவில் கற்களை கட்டியோ தாக்கலாம்.

கழுத்தை நெரிப்பவரிடம் தப்பிக்க அவரது காது, கண்களில் தாக்கினால் தம்மை தாமே பாதுகாத்துக் கொள்ள முடியும்.

இது போன்ற பல யுக்திகளை பெண்கள் தெரிந்து கொள்வது அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்கும். இதனால் வேறு ஒரு பெண்ணுக்கு பாதிப்பு ஏற்பட்டாலோ அவர்களையும் தம்மால் பாதுகாக்க முடியும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ladies protest tips


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->