தாம்பத்தியத்தில், மனைவியின் விருப்பத்தை அறிய இயலாத ஆண்கள் புரிந்துகொள்ள வேண்டியது என்ன?..! - Seithipunal
Seithipunal


தாம்பத்தியம் தொடர்பான விஷயங்களில் மனைவியின் விருப்பத்தை புரிந்துகொள்ளாத பல ஆண்களும் இன்றளவில் இருந்து வருகின்றனர். இவ்வாறான ஆண்கள் தாம்பத்திய விஷயத்தில் பல தவறுகளை செய்து வருகின்றனர். அவ்வாறான தவறுகள் தொடர்பாக இன்று காணலாம். 

1. பொதுவாக மனைவி கணவரிடம் அன்பு, பாசத்தை எதிர்பார்ப்பது போல தாம்பத்தியத்திலும் ஈடுபாடுகளை எதிர்பார்ப்பார். ஆனால், கணவன்மார்கள் இதனை புரிந்துகொள்வதில்லை.

ஆண்கள் புரிந்துகொள்ள வேண்டியது: 

ஆண்களுக்கு எப்படி தாம்பத்திய ஆர்வம் இருக்கிறதோ, அதனைப்போல பெண்களுக்கும் தாம்பத்தியம் மீதான ஈடுபாடு இருக்கும். பசி, தாகம், தூக்கம் போன்று தாம்பத்தியமும் ஒரு செயல்பாடு. மனைவிக்கு தாம்பத்தியத்தில் திருப்தி என்பது கட்டாயம் தேவைப்படுத்துகிறது. அதனை நிறைவேற்றும் பொறுப்பும், கடமையும் கணவனுக்கு உள்ளது. அன்பு மற்றும் பாசமே தாம்பத்தியத்தின் முதல் படி. அன்பு நிறைந்த தம்பதிகள், தாம்பத்திய விஷயத்தில் சிறப்பாக செயல்படுகின்றனர். இல்லறமும் நல்லறம் ஆகிறது.

2. தாம்பத்திய விஷயங்களில் ஈடுபட ஆண்களின் தயார் நிலையை போல, பெண்களின் தயார் நிலையும் அவசியம். 

ஆண்கள் புரிந்துகொள்ள வேண்டியது: 

போட்டித்தேர்வுகள் போல உள்ள பயத்துடன் ஆண்கள் தாம்பத்திய விஷயங்களுக்கும் பரபரப்பாக தயாராக தேவையில்லை. பரபரப்பில் இருந்தாலும் ஆண்களுக்கு உணர்ச்சி எளிதில் கிடைத்துவிடும். ஆனால், பெண்களுக்கு எளிதில் தாம்பத்திய ஆசை வராது. பயம், மனக்கவலை போன்று பெண்கள் இருந்தால், தாம்பத்திய உணர்வுகள் விரைவில் ஏற்படாது. இயல்பான மற்றும் பாசமான வெளிப்பாடு பெண்களை தாம்பத்தியத்திற்கு பக்குவப்படுத்தும். 

3. மனைவி படுக்கைக்கு வந்ததும் அலைபேசியில் ஆண்கள் நாட்டமாக இருப்பது.

ஆண்கள் புரிந்துகொள்ள வேண்டியது: 

தாம்பத்தியத்தில் தம்பதிகள் படுக்கையறையில் சிறந்த சூழ்நிலை, சுவாரசியமான பேச்சுக்கள், நெருடல்கள் என்று பல விஷயம் கூடுதல் இன்பத்தை சேர்க்கும். இதுபோன்ற தருணங்களில் தேவையில்லாமல் ஆண்கள் அலைபேசியை உபயோகம் செய்தால், பெண்களுக்கு வெறுப்பு மட்டுமே ஏற்படும். படுக்கையிலும் அலைபேசியில் நாட்டமாக இருந்தால், தேவையில்லாத சந்தேகங்களுக்கு வழிவகை செய்யும். மகிழ்வான தாம்பத்தியத்திற்கு அலைபேசி தடையாக இருக்க கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

4. மனைவியின் விருப்பங்களுக்கு மதிப்பு அளிக்காமல் இருப்பது.

ஆண்கள் புரிந்துகொள்ள வேண்டியது: 

தாம்பத்தியத்தில் தம்பதிகளின் உடலும் - மனதும் இணைகிறது. தாம்பத்தியம் வசந்தமாவதும், நீங்காத நினைவுகளாக இருப்பதும் உங்களின் செயல்பாடுகளில் தான் இருக்கிறது. கட்டியணைத்தலில் தம்பதிகள் இருவரும் சமநிலையை அடைகிறார்கள். தாம்பத்தியத்தின் போது ஆண்கள் எப்படி பல செயல்பாடுகளை உங்களுக்கு பிடித்தவாறு மாற்றுகிறார்களோ, அதனைப்போன்று பெண்களின் விருப்பத்தையும் கேட்டறிந்து செயல்பட வேண்டும். தாம்பத்தியத்தில் உங்களின் செயல்பாடுகள் மற்றும் மனைவியின் விருப்பத்தை கேட்டறிந்து செயலாற்றுதல் வாழ்க்கையின் பயண ஓட்டங்களுக்கும் உதவி செய்யும். 

5. ஆண்களின் மனஅழுத்தத்தை தீர்க்கும் மருந்தாக பெண்களை தாம்பத்தியத்திற்கு உபயோகம் செய்ய கூடாது. 

ஆண்கள் புரிந்துகொள்ள வேண்டியது: 

சிலருக்கு தினமும் ஏற்படும் பிரச்சனைகளுக்கு மருந்தாக தாம்பத்தியம் இருக்கிறது. இது கணவன் - மனைவியிடையே இருக்கும் அன்பை பெருக்க உதவி செய்யாது. தாம்பத்தியம் தம்பதிகளுக்குள் நெருக்கத்தை ஏற்படுத்தி, தங்களை புரிந்துகொள்ளும் அறிய வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கிறது. சின்னச்சின்ன சண்டைகளும் தாம்பத்தியத்தை தடை செய்யவும், மீண்டும் புதுப்பிக்கவும் உதவுகிறது. தாம்பத்தியம் என்ற மருந்தை அளவோடு உபயோகம் செய்தால் மட்டுமே தம்பதிகளுக்குள் தாம்பத்திய இன்பம் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும். 

6. உடற்சுத்தம் இல்லாமல் தாம்பத்தியம் கூடாது. 

ஆண்கள் புரிந்துகொள்ள வேண்டியது: 

இன்றுள்ள பெரும்பாலான ஆண்கள் தாம்பத்திய விஷயங்களில் செய்யும் பல தவறுகளில் உடல்சுத்தமும் இருக்கிறது. பெண்கள் எவ்வாறு குளித்துவிட்டு பூ வைத்து, தயாராக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதோ, அதே எண்ணம் மனைவிகளுக்கும் உண்டு என்பதை புரிந்துகொள்ள வேண்டும். தாம்பத்தியத்தில் படுக்கைக்கு செல்வதற்கு முன்னதாக ஆண்கள் உடல் சுத்தத்தோடு சென்றால், தாம்பத்தியத்தில் தம்பதிகளின் மனதிலும் சுத்தமான அன்பு நிறைந்து இருக்கும். சுத்தம் இல்லாத தாம்பத்தியம் பெண்களுக்கு நிறைந்த இன்பத்தை அளிக்காது என்பதை ஆண்கள் நினைவில் கொண்டு செயல்பட வேண்டும். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Husband Know Tips about First Night or Sacrifice Wife during Enjoy


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->