சுவையான பெங்காலி தக்காளி சாதம்.! செய்வது எப்படி.! - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள் : 

தக்காளி - 6,
பெரிய வெங்காயம் - 2, 
உதிராக வடித்த சாதம் - 2 கப், 
கடுகு, உளுந்து - தலா அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, 
பச்சை மிளகாய் - 3, 
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை தலா - சிறிதளவு, 
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்,
நெய் - 1 டேபிள் ஸ்பூன், 
உப்பு - தேவைக்கு.

பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2, கசகசா 2 - டீஸ்பூன், முந்திரி - 6, எண்ணெய் - 1 டீஸ்பூன் ஆகியவற்றை தனியாக பொடி செய்து எடுத்துக்கொள்ளவும். 

தனியா, துவரம் பருப்பு தலா - 2 டீஸ்பூன், மிளகாய் வற்றல் - 4, கொப்பரை தேங்காய்த் துருவல் - 3 டேபிள் ஸ்பூன், எண்ணெய் 1 டீஸ்பூன் ஆகியவற்றை தனியாக பொடி செய்து எடுத்துக்கொள்ளவும். 

thakkali sadham,seithipunal

செய்முறை:

கொத்தமல்லி, வெங்காயம் மற்றும் தக்காளியை பொடி, பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும். பின் பச்சை மிளகாயை இரண்டாக வகுத்து எடுத்து கொள்ளுங்கள். 

கடாயில், எண்ணெய், நெய்யை ஊற்றி சூடான பின்னர் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். பின்னர் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

இத்துடன் உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு தக்காளி குழைய வதங்கிய பின்னர் இறக்கி, சாதத்தில் எடுத்து போட்டு அரைத்த பொடிகளை தூவி  கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை ஆகியவற்றை சேர்த்துக் நன்றாக கிளறவும். 

சுவையான பெங்காலி தக்காளி சாதம் தயார்.!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to prepare pengali tomato rice


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->