தூக்கமின்மையால் வரும், கல்லீரல் பிரச்சனைகளுக்கு சூப்.! - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள் :

தக்காளி - 2
பீட்ரூட் - 1/4 கிலோ
வெண்ணெய் - 25 கிராம்
பெரிய வெங்காயம் - 1
கரம்மசாலா தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகுத்தூள் - தேவையான அளவு
சோளா மாவு - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 3 கப்
கிரீம் - 1 டீஸ்பூன்

beetroot, seithipunal
செய்முறை :

வெங்காயம் மற்றும் தக்காளியை நன்றாக பொடி பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும். மேலும், பீட்ரூட்டை நன்றாக தோல் சீவி எடுத்து கழுவி எடுத்து கொள்ளவும். 

 அரை கப் தண்ணீரில் சோளா மாவை சிறிதும் கட்டி ஏற்படாமல் கரைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.

குக்கரில் 3 கப் தண்ணீரை ஊற்றி அதில், நறுக்கிய வெங்காயம், தக்காளி, பீட்ரூட்டை சேர்த்து அதனுடன் மிளகுத்தூள், உப்பு, கரம்மசாலா தூள், வெண்ணெய் உள்ளிட்டவை சேர்த்து 2 விசில் போட்டு வேக வைத்து பின்னர் மசித்து வடிகட்டி கொள்ளவும். 

பின்னர் வேறொரு பாத்திரத்தில், பீட்ரூட் சாறுடன் கரைத்து வைத்துள்ள சோளமாவு கரைசலை ஊற்றி கொதிக்க விடவும். அவ்வாறு கொதிக்கையில் அத்துடன் ஒரு ஸ்பூன் கிரீம் சேர்த்தால் சுவையான ரெடி.! 

குறிப்பு: இத்துடன் நெய்யில் பிரெட் துண்டுகளை வறுத்து கப்பில் போட்டு பரிமாறவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to prepare beetroot soup


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->