கோடை வெயிலுக்கு இதமான அவல் மோர்க்கூழ்.. வீட்டிலேயே செய்வது எப்படி?..! - Seithipunal
Seithipunal


கடந்த மார்ச் மாதத்தின் பாதியில் இருந்தே கோடை வெயில் தமிழக மக்களை வாட்டி வதைக்க தொடங்கியுள்ளது. இதனால் உடலுக்கு குளிர்ச்சியான மற்றும் இயற்கையான உணவுகளை மக்கள் அதிகளவு வாங்கி சாப்பிட தொடங்கியுள்ளனர். அந்த வகையில், அவல் மோர்க்கூழ் செய்வது எப்படி என காணலாம். 

அவல் மோர்க்கூழ் செய்யத்தேவையான பொருட்கள்: 

அவல் - ஒரு கிண்ணம்,
சின்ன வெங்காயம் தோலுரித்து, பொடியாக நறுக்கியது - கால் கிண்ணம்,
நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
பச்சை மிளகாய் - 2,
கறிவேப்பிலை - சிறிதளவு,
கடுகு - அரை கரண்டி,
உளுந்து - ஒரு கரண்டி,


சீரகம் - அரை கரண்டி,
கடலைப்பருப்பு - ஒரு கரண்டி,
இஞ்சி துருவியது - ஒரு கரண்டி,
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
புளித்த தயிர் - ஒரு கிண்ணம்,
தேங்காய்த்துருவல் - 3 கரண்டி,
எண்ணெய் மற்றும் உப்பு - தேவைக்கேற்ப.

அவல் மோர்க்கூழ் செய்முறை:

முதலில் எடுத்துக்கொண்ட வானெலியில் அவலை வறுத்து மிக்சியில் மாவாக அரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் தயிரில் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கடைந்து மோராக எடுத்துக்கொள்ள வேண்டும். 

வானெலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், உளுந்து ஆகியவற்றை சேர்த்து அவை வறுபட்டதும், கடலை பருப்பு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பில்லை, இஞ்சி, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி விட வேண்டும். 

அடுப்பில் நெருப்பை குறைந்த தீயில் வைத்து கடைந்த மோரினை அதில் சேர்த்து, அவல் மாவினை போட்டு உப்பு மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து கொதிக்க விட வேண்டும். நன்றாக வெந்ததும் கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கினால் சுவையான மற்றும் உடலுக்கு குளிர்ச்சியை தரும் அவல் மோர்க்கூழ் தயார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to Prepare Aval Morkool Control Heat Summer Season


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவுAdvertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவு
Seithipunal