கருப்பு உளுந்தில் சட்னியா? - வாங்க பார்க்கலாம்.!
how to make ulunthu chutny
மக்கள் தங்களின் வாழ்க்கை முறைக்கேற்ப உணவு முறைகளையும் மாற்றிக் கொள்கின்றனர். அதன் படி காலை மற்றும் இரவில் இட்லி அல்லது தோசை செய்து சாப்பிடுகின்றனர். இதற்கு என்ன சட்னி செய்வது என்று யோசிப்பதே பெரும் வேலையாக உள்ளது. இந்த நிலையில் கருப்பு உளுந்தில் சட்னி செய்வது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய்
கருப்பு உளுந்து
வெள்ளை உளுந்து
பெரிய வெங்காயம்
தக்காளி
பூண்டு
புளி
வர மிளகாய்
கறிவேப்பிலை
உப்பு
கடுகு
சீரகம்
உளுந்து
வரமிளகாய்
கறிவேப்பிலை
செய்முறை:-
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கருப்பு உளுந்து, வெள்ளை உளுந்தை சேர்த்து வறுக்கவேண்டும். இதனுடன், கறிவேப்பிலை, புளி, மிளகாய், பூண்டு, உப்பு, வெங்காயம், தக்காளி உள்ளிட்டவை சேர்த்து நன்றாக வதக்கி ஆறவிடவேண்டும்.
இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சட்னியாக அரைத்துக் கொள்ளவேண்டும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, உளுந்து, சீரகம், கறிவேப்பிலை, மிளகாயை கிள்ளி சேர்த்து தாளித்து, சட்னியில் சேர்க்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான கருப்பு உளுந்து சட்னி தயார்.
English Summary
how to make ulunthu chutny