மாங்காயில் சட்னியா? - வாங்க பார்க்கலாம்.!
how to make mango chutny
கோடைகாலம் ஆரம்பமானாலே மாங்காய் சீஸனும் தொடங்கிவிடும். அதனால், இந்த மாயை வைத்து புதிய முறையில் சட்னி செய்வது எப்படி என்று இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:-
மாம்பழம்
கடலைப்பருப்பு
உளுந்தம்பருப்பு
பெருங்காயம்
காய்ந்த மிளகாய்
பச்சை மிளகாய்
கடுகு
பெருங்காயம்
பூண்டு
கறிவேப்பிலை
உப்பு
செய்முறை:-
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
இதனை மிக்ஸியில் போட்டு சீரகம், பூண்டு, மாங்காய், உப்பு உள்ளிட்டவை சேர்த்து அரைக்கவும். பிறகு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு கடுகு உளுந்து , பெருங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். அதனுடன் அரைத்த கலவையை சேர்க்க வேண்டும்.